சுடச்சுட

  

  சீமாந்திரா மாநிலத்தில் எரிவாயுக் குழாய் வெடித்த விபத்து தொடர்பாக, கெயில் நிறுவனத்தின் மீதும் அதன் அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

  இதுதொடர்பாக கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

  ஆந்திர மாநிலத்தில் கெயில் நிறுவனத்தின் எரிவாயுக் குழாய் வெடித்த நிகழ்ச்சி மிகவும் வேதனையானது. இறந்தவர்களுக்கு நிவாரணமும், காயமடைந்தவர்களுக்கு உதவியும் வழங்கப்பட்டுள்ளன.

  ஆனால் கெயில் நிறுவனம் மீதும் அதிகாரிகள் மீதும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. முன்னரே எரிவாயு கசிந்த விவரம் கெயில் நிறுவன அதிகாரிகளுக்குத் தெரியும் என்று கூறப்படுகிறது. அதிகாரிகள் உரிய முறையில் கவனம் செலுத்தாதது தான் இதற்குக் காரணம் என்றும் கூறப்படுகிறது. தவறு செய்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவில்லையென்றால் இதுபோன்ற நிகழ்வுகளைத் தவிர்க்க முடியாது.

  கெயில் நிறுவன அதிகாரிகள் யாரும் இதுவரை ஏன் கைது செய்யப்படவில்லை என்று மக்களிடம் கேள்வி எழுந்துள்ளது. பாதுகாப்பை உறுதி செய்யாத அதிகாரிகள் உடனடியாகக் கைது செய்யப்பட்டிருக்க வேண்டும். அப்போது தான் அதிகாரிகளுக்குப் பொறுப்புணர்வு வரும்.

  தமிழகத்தின் 7 மாவட்டங்களில் விவசாய நிலங்கள் மற்றும் கிராமங்கள் வழியாக எரிவாயுக் குழாய் எடுத்துச் செல்வதில் இருக்கும் ஆபத்துகளை எடுத்துச் சொல்லியும் கெயில் நிறுவனம் விவசாயிகள் உச்ச நீதிமன்றம் வரை இழுத்துச் சென்றுள்ளது. இந்த விஷயத்தில் விவசாயிகளுக்கு ஆதரவாகச் செயல்படும் தமிழக அரசுக்கு நன்றி என்று குறிப்பிட்டுள்ளார்.

   

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai