சுடச்சுட

    

    கொல்ல முயன்றதாக மனைவி புகார்:கிராம நிர்வாக அலுவலர் மீது வழக்கு

    By கோவை  |   Published on : 29th June 2014 03:29 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவை அருகே மனைவி அளித்த புகாரின் பேரில் கிராம நிர்வாக அலுவலர் மீது மகளிர் போலீஸார் கொலை முயற்சி வழக்கு பதிவு செய்துள்ளனர்.

    இதுகுறித்து போலீஸார் கூறியது:

    மதுக்கரை அருகே உள்ள குரும்பாளையம், ஜீவா வீதியைச் சேர்ந்தவர் பன்னீர்செல்வம் (31). இவர் கிணத்துக்கடவு அருகே கோதவாடியில் கிராம நிர்வாக அலுவலராகப் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி மஞ்சுளா (26). இருவருக்கும் 5 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது; நான்கு வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது.

    கடந்த 24-ஆம் தேதி பன்னீர்செல்வம் மஞ்சுளாவிடம் விவகாரத்துப் பத்திரத்தில் கையெழுத்து கேட்டு வற்புறுத்தியதாகத் தெரிகிறது. இதனால் மனமுடைந்த மஞ்சுளா சாணிப்பவுடரை நீரில் கலந்து குடித்துள்ளார். அதைத் தொடர்ந்து சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    இந்நிலையில், பேரூர் அனைத்து மகளிர் போலீஸில் பன்னீர்செல்வம், அவரது தாய் தனபாக்யம், சகோதரி சித்ரா ஆகியோர் தன்னைக் கொடுமைப்படுத்துவதாக மஞ்சுளா புகார் அளித்தார். மேலும் 24-ஆம் தேதி பன்னீர்செல்வம் தனது தலையைச் சுவற்றில் மோதி கொலை செய்ய முயன்றதாகவும் தெரிவித்துள்ளார்.

    புகாரின் பேரில் அவர்கள் மூவர் மீதும் பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர். கூடுதலாக பன்னீர்செல்வம் மீது கொலை முயற்சி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai