சுடச்சுட

    

    சிறுமுகை அம்பாள் பப்ளிக் பள்ளியில் இலவச கண் மருத்துவ முகாம்

    By மேட்டுப்பாளையம்  |   Published on : 29th June 2014 03:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

     சிறுமுகை அம்பாள் பப்ளிக் பள்ளியில் நடைபெற்ற இலவச கண் மருத்துவ முகாமில், பள்ளியைச் சேர்ந்த 1,200 மாணவ மாணவியருக்கு கண் பரிசோதனை செய்யப்பட்டது.

    அன்னூர் ஆறுக்குட்டி நினைவு அறக்கட்டளை, சிறுமுகை அம்பாள் பப்ளிக் பள்ளி, கோவை லோட்டஸ் கண் மருத்துவமனை சார்பில் பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை நடைபெற்ற முகாமுக்கு பள்ளித் தாளாளர் பழனிசாமி தலைமை வகித்து முகாமைத் துவங்கி வைத்தார். பள்ளி முதன்மை நிர்வாக அலுவலர் வேலுசாமி முன்னிலை வகிக்க, பப்ளிக் பள்ளி முதல்வர் ராணி வரவேற்றார். முகாமில் லோட்டஸ் கண் மருத்துவமனையின் தலைமை மருத்துவர் ரமேஷ் தலைமையிலான மருத்துவக் குழுவினர் பங்கேற்று, மாணவ மாணவியருக்கு கண் தொடர்பான பல்வேறு பரிசோதனைகள் மேற்கொண்டு, உரிய மருத்துவ ஆலோசனைகளையும் வழங்கினர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai