சுடச்சுட

  

  அன்னூர், ஜி.ஆர்.ஜி. பாலிடெக்னிக் கல்லூரியில் வெள்ளிக்கிழமை முதலாம் ஆண்டு மாணவர்களை வரவேற்கும் விழாவில் எழுத்தாளர் மரபின்மைந்தன் முத்தையா பேசினார் .

  விழாவுக்கு கல்லூரித் தாளாளர் ஆர்.நந்தினி தலைமை வகித்தார். முதல்வர் ஆ.சங்கரசுப்பிரமணியம் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக எழுத்தாளர் மரபின்மைந்தன் முத்தையா கலந்துகொண்டார். அவர் பேசியதாவது:

  பெற்றோர் தங்களது பிள்ளைகளை கல்லூரியில் சேர்த்து விட்டால் மட்டும் போதாது; அவர்களின் தனித்திறமைகளைக் கண்டறிந்து ஊக்கமளிக்க வேண்டும். மாணவ மாணவிகள் தாங்கள் என்னவாக வேண்டும் என்பதை தாங்களாகவே முடிவெடுக்க வேண்டும்.

  தங்களின் தனித் திறமைகளை வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் வெளிக்காட்ட வேண்டும். தாழ்வு மனப்பான்மையை மாணவர்கள் கைவிட வேண்டும். விமர்சனங்களைக் கண்டு பயப்படாமல், ஊக்குவிப்பாக எடுத்துக்கொள்ளும் மனப்பக்குவத்தை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.

  இந்நிகழ்சியில் மாணவ மாணவிகள், அவர்களின் பெற்றோர், முன்னாள் மாணவ மாணவிகள், பேராசிரியர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர். பேராசிரியர் சத்தியவதி நன்றி கூறினார்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai