சுடச்சுட

    

    நீர்வள ஆணையத்தைக் கண்டித்து பொள்ளாச்சியில் தபெதிக ஆர்ப்பாட்டம்

    By பொள்ளாச்சி  |   Published on : 29th June 2014 03:31 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    முல்லைப் பெரியாறு, பரம்பிக்குளம் அணைகள் விவகாரத்தில் மத்திய நீர்வள ஆணையம் தமிழகத்துக்கு துரோகம் இழைப்பதாகக் கூறி, பொள்ளாச்சியில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினர் சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    தமிழகத்தின் கட்டுப்பாட்டில் கேரள எல்லையில் அமைந்துள்ள முல்லைப் பெரியாறு, பரம்பிக்குளம், தூணக்கடவு, பெருவாரிப்பள்ளம் அணைகள் உள்ளன. கடந்த ஆண்டுவரை மத்திய நீர்வள ஆணையத்தின் பதிவேட்டில் இந்த நான்கு அணைகளும், தமிழக அணைகள் பட்டியலில் இருந்தன.

    தற்போது, கேரளத்தின் தொடர் வற்புறுத்தலால் மத்திய நீர்வள ஆணையத்தின் பதிவேட்டில் இந்த நான்கு அணைகளும் கேரள அணைகளின் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளதாகத் தெரிகிறது.

    இதனால், தமிழகத்தின் உரிமை பறிக்கப்பட்டுள்ளதாகக் கருதப்படுகிறது. இந்த அணைகள் கேரளத்திற்குச் சொந்தம் என்று கேரள சட்டசபையில் கேரள எதிர்க்கட்சிகள் விவாதத்தை கிளப்பியுள்ளன.

    இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, தமிழகத்திற்கு மத்திய நீர்வள ஆணையம் துரோகம் இழைப்பதாகக் கூறி, தந்தை

    பெரியார் திராவிடர் கழகத்தினர் பொள்ளாச்சியில் சனிக்கிழமை மத்திய நீர்வள ஆணையத்தைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

    மண்டல செயலாளர் நாகராசன் தலைமை வகித்தார். நகர செயலாளர் வெள்ளியங்கிரி முன்னிலை வகித்தார். நிர்வாகிகள் ஹரிதாஸ், பிரபாகரன், ஸ்ரீநிவாசன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    இதுபற்றி நாகராசன் கூறுகையில், ""கேரள பட்டியலில் வெளியிடப்பட்டுள்ள முல்லைப் பெரியாறு, பரம்பிக்குளம், தூணக்கடவு, பெருவாரிப்பள்ளம் ஆகிய அணைகளை, பதிவேட்டை திருத்தி தமிழக பட்டியலில் வெளியிட வேண்டும்.

    இல்லாவிட்டால், தமிழகத்தில் மிகப் பெரிய போராட்டம் நடத்தப்படும்'' என்றார்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai