சுடச்சுட

    

    கிணத்துக்கடவு, அக்ஷயா பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரி, புதுதில்லி எலக்ட்ரானிக்ஸ் ஃபார் யு என்டர்பிரைசஸ் நிறுவனத்துடன் அண்மையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளது.

    கல்லூரி இயக்குநர் கெ.தனுஷ்கோடி, எலக்ட்ரானிக்ஸ்

    ஃபார் யு நிறுவனத்தின் தென்னிந்திய இயக்குநர் பி.கார்த்திகேயன் ஆகியோர் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டனர்.

    அக்ஷயா கல்லூரி மாணவர்களுக்கு செயல் நோக்கத்தில் அனைத்து வழிகளிலும் உதவி செய்தல், பிற நிறுவனங்களுக்கு அழைத்துச் சென்று பயிற்சியளித்தல் ஆகியவை இப்புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் கிடைக்கும்.

    அக்ஷயா கல்லூரியின் நிர்வாக அறங்காவலர் அ.நாகராசன், தலைவர் தி.சுப்பிரமணியன், செயலர் கு.பவித்ரன், இணை இயக்குநர் சுகுணா, முதல்வர் ஜெயா ஆகியோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

     

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai