சுடச்சுட

    

    பொதுத்தேர்வுகளில் சிறந்த மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு காரமடையில் பாராட்டு

    By மேட்டுப்பாளையம்,  |   Published on : 29th June 2014 03:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காரமடை மளிகை வியாபாரிகள் சங்கம் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கடந்த பிளஸ் 2 மற்றும் 10வது பொதுத்தேர்வில் சிறந்த மதிப்பெண் எடுத்த மாணவ மாணவியருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

    காரமடை, கிழக்குரத வீதியிலுள்ள அலுவலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, மளிகை வியாபாரிகள் சங்கத் தலைவர் கே.பி.வி. கோவிந்தன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் ஜான் யோவான், துணைச்செயலர் அசோகன் ஆகியோர் முன்னிலை வகிக்க, சங்கச் செயலாளர் துரைசாமி வரவேற்றார்.

    விழாவில் கடந்த பிளஸ் 2 தேர்வில் பொது இயந்திரவியல் பாடத்தில் மாநிலத்தில் முதலிடமும், கல்வி மாவட்டத்தில் பள்ளி மூன்றாமிடமும் பெற்ற மாணவி மெல்பா, 10-ம் வகுப்பு தேர்வில் 90 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் எடுத்த மாணவர்கள் நரேன், தனுஷ், தீபா தருஷ்ணி, சந்தோஷ் ஆகியோருக்கு கேடயம் மற்றும் பரிசுத் தொகைகளை சங்கத் தலைவர் கே.பி.வி. கோவிந்தன் வழங்கினார்.

    நிகழ்ச்சியில் சங்க நிர்வாகிகள் சுப்பிரமணியம், வேலுமணி, பாலசுப் பிரமணியம், ஆனந்தன் உள்பட பலரும் வாழ்த்திப் பேசினர். சங்கச் செயலாளர் சிவராஜ் நன்றி கூறினார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai