சுடச்சுட

  

  ஆலயங்களில் கட்டண தரிசன முறையை எதிர்த்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம்

  By கோவை,  |   Published on : 30th June 2014 03:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  ஆலயங்களில் நடைமுறையில் உள்ள கட்டண தரிசன முறையை எதிர்த்து தமிழகம் முழுவதும் ஆர்ப்பாட்டம் நடத்த இந்து முன்னணி தீர்மானித்துள்ளது.

  கோவை மாநகர் மாவட்ட இந்து முன்னணி கலந்தாய்வுக் கூட்டம், பி.என்.புதூர் பகுதியில் நடைபெற்றது. மாநில பொதுச் செயலாளர் காடேஸ்வரா சி.சுப்ரமணியம் தலைமை வகித்தார். மாநில செயற்குழு உறுப்பினர் கிஷோர்குமார் முன்னிலை வகித்தார். மாநகர் மாவட்டப் பகுதிகளில் உள்ள 100 கோட்டங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

  வேலூரில் கடந்த ஆண்டு கொலை செய்யப்பட்ட இந்து முன்னணி அமைப்பின் மாநில செயலாளர் வெள்ளையப்பனின் முதலாமாண்டு நினைவு தின நிகழ்ச்சியை ஜூலை 1-ஆம் தேதி நடத்துவது, ஆலயங்களில் நடைமுறையில் உள்ள கட்டண தரிசன முறையை எதிர்த்து தமிழகம் முழுவதும் ஜூலை 20ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடத்துவது, கோவையில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் மாநில அமைப்பாளர் இராம.கோபாலனை பங்கேற்கச் செய்வது என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai