சுடச்சுட

  

  பொள்ளாச்சியில் ரவுடிகளுக்குள் ஏற்பட்ட தகராறில் ஒருவர் கழுத்தை அறுத்துக் கொலை செய்யப்பட்டார்.

  பொள்ளாச்சி மரப்பேட்டையை சேர்ந்தவர் ரகுபதி (30). இவருக்கும், பொள்ளாச்சி வடுகபாளையம் பிரிவைச் சேர்ந்த சுபாகருக்கும் (30), முன்விரோதம் இருந்துள்ளது. இந்நிலையில், ஞாயிற்றுக்கிழமை மரப்பேட்டையில் உள்ள ரகுபதி வீட்டுக்கு சென்ற சுபாகர், அவருடன் தகராறு செய்ததாக கூறப்படுகிறது. அப்போது சுபாகரை தட்டிக் கேட்க மாக்கினாம்பட்டியை சேர்ந்த பிரபல ரவுடி அசோகன் (40) அங்கு வந்துள்ளார். அங்கு சுபாகரை அசோகன் தாக்கியுள்ளார். இதில் ஆத்திரமடைந்த சுபாகர், அசோகனை கொலை செய்ய திட்டமிட்டு அவருடன் சமரசம் பேசுவதுபோல் நடித்து, பொள்ளாச்சி வள்ளியம்மாள் லே-அவுட்டில் உள்ள ராஜசேகர் என்பவரது வீட்டுக்கு அழைத்துவந்துள்ளார். அங்கு தயாராக இருந்த சுபாகரின் நண்பர்கள் பிரேம்குமார் (31), மதிவாணன் (23), ஆனைமலையை சேர்ந்த அந்தோனி சிம்சன் (35) ஆகியோருடன் சேர்ந்து அசோகனின் கழுத்தை அறுத்துக் கொலை செய்ததாக தெரிகிறது.

  கொலை செய்தவர்கள் பொள்ளாச்சி மேற்கு போலீஸில் சரண் அடைந்துள்ளனர். இவர்கள் நான்கு பேரும் நண்பர்கள். இவர்கள் ஆட்டோ டிரைவர்கள் என்றும், பிரபல ரவுடிகள் என்றும் கூறப்படுகிறது.

  இதில் சுபாகர் மீது ஆனைமலை போலீஸில் ஒரு கொலை முயற்சி வழக்கும், பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையத்தில் ஒரு கொலை முயற்சி வழக்கும் உள்ளது. மேலும், கொலை வழக்கில் குற்றவாளிகளாக சந்தேகிக்கப்படும் பலர் குறித்து பொள்ளாச்சி மேற்கு போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai