சுடச்சுட

    

    கவிதை, சிறுகதை, சிறந்த நூல் போட்டியில் பங்கேற்க அழைப்பு

    By கோவை,  |   Published on : 30th June 2014 03:21 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    உலக கலைத் தமிழ் மன்றம் சார்பில் கவிதை, சிறுகதை மற்றும் சிறந்த நூல் போட்டி நடத்தப்படுகிறது.

    உலக கலைத் தமிழ் மன்றத்தின் 14-ஆம் ஆண்டு கலை விழா நடைபெற உள்ளது. அதையொட்டி போட்டிகள் நடத்தப்படுகின்றன. எங்கள் தமிழ் வெல்லும் என்ற தலைப்பில் 24 வரிகளுக்கு மிகாமல் கவிதைகள் இருக்க வேண்டும். மரபுக் கவிதைகளாகவோ, புதுக் கவிதைகளாகவோ இருக்கலாம். மரபுக் கவிதைகளுக்கு முன்னுரிமை வழங்கப்படும். சிறுகதைகள், சமுதாயச் சிந்தனை மற்றும் விழிப்புணர்வைத் தூண்டும் வகையில் தன்னம்பிக்கை, கலாசாரம், பண்பாடு, மொழிப்பற்று, நாட்டுப் பற்று ஆகியவற்றைக் கருவாகக் கொண்டு 4 பக்கங்களுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

    சிறந்த நூலுக்கு தமிழ் வள்ளல் பாண்டித்துரைத் தேவர் இலக்கிய விருது மற்றும் பொற்கிழி வழங்கப்படும். இலக்கியம், கதை, சிறுகதைத் தொகுப்பு, கவிதை, வரலாறு மற்றும் நகைச்சுவை நூல்களை அனுப்பலாம். இரண்டு பிரதிகள் அனுப்ப வேண்டும். நூல்கள் எந்த ஆண்டில் அச்சிடப்பட்டதாகவும் இருக்கலாம்.

    போட்டிகளில் பங்கேற்க விரும்புபவர்கள் ஜூலை 20-ஆம் தேதிக்குள் தமது படைப்புகளுடன் சுய விலாசமிட்ட அஞ்சல் அட்டையை இணைத்து தமிழருவி மு.பெ.இராமலிங்கம், தலைவர், உலக கலைத் தமிழ் மன்றம், பாவலர் குடில், 56, காமராசர் தெரு, சனதா நகர், சரவணம்பட்டி, கோவை - 35 என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும்.வெற்றி பெறும் படைப்பாளர்களுக்கு மன்றத்தின் ஆண்டு விழாவில் பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்கப்படும்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai