Enable Javscript for better performance
காதலுக்கு எதிர்ப்பு: இளைஞர் தற்கொலை- Dinamani

சுடச்சுட

    

    காதலுக்கு பெற்றோர் எதிர்ப்புத் தெரிவித்ததால் காதலி வீட்டில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார் ஓர் இளைஞர்.

    இது குறித்து போலீஸார் கூறியது: நீலகிரி மாவட்டம், உதகையைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி (25). சென்னையில் உள்ள ஒரு தனியார் வங்கியில் பணிபுரிந்து வந்தார்.

    முன்னதாக கோவையில் பள்ளியில் படிக்கும் போது போத்தனூர் எல்.ஐ.சி. காலனியைச் சேர்ந்த ஒரு பெண்ணுடன் காதல் ஏற்பட்டது. அவர்களது காதலுக்கு பெண்ணின் வீட்டில் சம்மதம் தெரிவித்துள்ளனர்.

    திங்கள்கிழமை அந்த பெண்ணுக்கு பிறந்த நாள் என்பதால், கோவையில் உள்ள அவரது வீட்டுக்கு கிருஷ்ணமூர்த்தி ஞாயிற்றுக்கிழமை வந்துள்ளார். இது குறித்து கிருஷ்ணமூர்த்தியின் பெற்றோருக்குத் தெரிய வர, அவர்கள் காதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.

    இதனால் மனமுடைந்த கிருஷ்ணமூர்த்தி, அப் பெண்ணின் வீட்டில் தூக்குப் போட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

    சம்பவ இடத்துக்கு சென்ற போத்தனூர் போலீஸார், அவரது உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழக்குப் பதிவு செய்து விசாரிக்கப்படுகிறது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai