சுடச்சுட

    

    ஜி.கே.டி. மெட்ரிக் பள்ளியில் மாணவ நிர்வாகிகள் பொறுப்பேற்பு

    By பெ.நா.பாளையம்  |   Published on : 30th June 2014 03:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெரியநாயக்கன்பாளையத்தில் உள்ள ஜி.கே.டி. மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் உள்ள மாணவர் குழு நிர்வாகிகளுக்கான தேர்தலில் வெற்றி பெற்றவர்கள் பொறுப்பேற்றனர்.

    கணினி மூலம் பள்ளியில் நடைபெற்ற தேர்தலில் 50க்கு மேற்பட்டவர்கள் போட்டியிட்டனர். இதில் மாணவர் தலைவராக 48 சதவீத வாக்குகள் பெற்று பி.நிவின் கிருஷ்ணனும், துணைத் தலைவராக 29 சதவீத வாக்குகள் பெற்று பி.ரவிசங்கரும், மாணவியர் தலைவியாக 32 சதவீத வாக்குகள் பெற்று ஆர்.திவ்ய தர்ஷிணியும், துணைத் தலைவியாக 32 சதவீத வாக்குகளுடன் ஆர்.நர்மதாவும் வெற்றி பெற்றனர்.

    மாணவர் பிரிவில் ஒழுக்கக்குழுத் தலைவராக 57 சதவீத வாக்குகள் பெற்று கே.சஷ்டிசரணும், தலைவியாக 34 சதவீத வாக்குகளுடன் பி.ஜெ.மானசாவும், கலாசாரப் பிரிவுத் தலைவராக 29 சதவீத வாக்குகளுடன் வி.பி.கெüதம் ராஜுவும், தலைவியாக 30 வாக்குகளுடன் ஜெ.டானிகாவும் வெற்றி பெற்றனர்.

    தூய்மைப்பிரிவில் தலைவராக 28 சதவீத வாக்குகளுடன் ஜி.நரேந்திரனும், தலைவியாக 31 சதவீத வாக்குகளுடன் ஜி.மோனிகாவும், விளையாட்டுப் பிரிவுத் தலைவராக 43 சதவீத வாக்குகளுடன் எஸ்.சஞ்சயும், தலைவியாக 43 சதவீத வாக்குகளுடன் எஸ்.கீர்த்தனாவும் வெற்றி பெற்றனர்.

    இவர்கள் அனைவரும் பள்ளியின் பிரார்த்தனைக் கூட்டத்தில் முதல்வர் பிரசன்னா ராதாகிருஷ்ணன், தாளாளர் ஆர்.ராஜேந்திரன் ஆகியோர் தலைமையில் ஆயிரக் கணக்கான மாணவர்கள் முன்பு பொறுப்பேற்றுக் கொண்டனர். அத்துடன் உறுதிமொழியும் ஏற்றுக் கொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai