சுடச்சுட

    

    நரசிம்மநாயக்கன்பாளையத்தில் ரூ. 16 லட்சத்தில் புதிய பூங்கா திறப்பு

    Published on : 30th June 2014 03:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    நரசிம்மநாயக்கன்பாளையத்தில் பேரூராட்சி சார்பில் புதிதாக அமைக்கப்பட்ட பூங்காவை கவுண்டம்பாளையம் தொகுதி எம்எல்ஏ வி.சி.ஆறுக்குட்டி வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார்.

    இப்பேரூராட்சிக்கு உள்பட்ட ராஜேந்திரா நகரில் பொதுப்பயன்பாட்டிற்கு ஒதுக்கப்பட்ட மனையில் ரூ. 16 லட்சம் செலவில் குழந்தைகளுக்கான விளையாட்டு உபகரணங்கள், மக்கள் நடைபயிற்சி மேற்கொள்ளும் பாதை, ஓய்வெடுக்க சாய்வு நாற்காலிகளுடன் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.

    இதன் திறப்பு விழாவுக்கு கோவை எம்.பி. ஏ.பி.நாகராஜன், பேரூராட்சித் தலைவர் எம்.ஆனந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பூங்காவைத் திறந்துவைத்த கவுண்டம்பாளையம் தொகுதி எம்எல்ஏ வி.சி.ஆறுக்குட்டி, மக்கள் தகுந்த முறையில் இதனைப் பராமரித்து பயன்படுத்த வேண்டும் என்று கேட்டுக் கொண்டார்.விழாவில் துணைத் தலைவர் சம்பத், ஒன்றியத் தலைவர் விஜயன், ஊராட்சித் தலைவர்கள் டி.ரவி (குருடம்பாளையம்), கவிசரவணகுமார் (பன்னிமடை), உஷா மாலு (அசோகபுரம்), பேரூராட்சி கவுன்சிலர்கள் பூபதி, விவேகானந்தன், பாண்டுரங்கன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். செயல் அலுவலர் டி.ரவி நன்றி கூறினார்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai