சுடச்சுட

  

  நாகர்கோவில்-கோவை இடையிலான பயணிகள் ரயில் சேவையில் ஜூலை 2-ஆம் தேதி வரை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

  இது குறித்து சேலம் கோட்ட ரயில்வே வெளியிட்டுள்ள அறிவிப்பு:

  மதுரை மற்றும் திருப்பரங்குன்றம் ரயில் நிலையம் அருகே சுரங்க நடைபாதை அமைக்கப்பட உள்ளது. இதைத் தொடர்ந்து நாகர்கோவிலில் இருந்து புறப்படும் ரயில், திருநெல்வேலி ரயில் நிலையத்தில் 70 நிமிஷங்கள் நிறுத்தப்பட உள்ளது.

  தூத்துக்குடி-திருச்செந்தூர் பயணிகள் ரயில், திருநெல்வேலி ரயில் நிலையத்திற்கு வந்தபின் 70 நிமிஷங்கள் தாமதமாகப் புறப்படும். அதே போல திருப்பரங்குன்றம் ரயில் நிலையத்தில் நாகர்கோவில்-கோவை பயணிகள் ரயில் நிறுத்திவைக்கப்படும். பின்னர் 110 நிமிஷங்கள் தாமதமாக மாலை 3.10 மணிக்கு ரயில் புறப்படும். இதே போல கோவையில் இருந்து நாகர்கோவில் வரை இயக்கப்படும் ரயில், மதுரை ரயில் நிலையத்தில் சுமார் 60 நிமிஷங்கள் நிறுத்தப்படும். இருமார்க்கத்திலும் இயக்கப்படும் நாகர்கோவில் பயணிகள் ரயில் சேவை மாற்றம் ஜூலை 2-ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

  Thirumana Porutham
  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai