Enable Javscript for better performance
நெட் தேர்வு: விண்ணப்பித்தவர்களில் 70 சதவீதம் பேர் பங்கேற்பு- Dinamani

சுடச்சுட

    

    நெட் தேர்வு: விண்ணப்பித்தவர்களில் 70 சதவீதம் பேர் பங்கேற்பு

    By கோவை  |   Published on : 30th June 2014 03:22 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற, கல்லூரி உதவிப் பேராசிரியர்களுக்கான தேசிய தகுதித் தேர்வை (நெட்), விண்ணப்பித்தவர்களில் 70 சதவீதம் பேர் எழுதினர்.

    கோவையில் 6 மையங்களில் இத் தேர்வு நடைபெற்றது. தேர்வு எழுத மொத்தம் 8,318 பேர் விண்ணப்பித்திருந்தனர். இதில் 5,108 பெண்களும், 3,210 ஆண்களும் அடங்குவர். இவர்களில் 102 பேர் மாற்றுத் திறனாளிகள். 43 பேர் பார்வைத் திறன் குறைபாடு உடையவர்கள்.

    அவிநாசி சாலை நவஇந்தியா பகுதியில் உள்ள இந்துஸ்தான் கலை அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற நெட் தேர்வை, பாரதியார் பல்கலைக்கழக துணைவேந்தர் ஜி.ஜேம்ஸ் பிச்சை பார்வையிட்டு ஆய்வு செய்தார். இத்தேர்வை கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள் எழுதினர். விண்ணப்பித்தவர்களில் 70 சதவீதம் பேர் தேர்வு எழுதியதாகவும், 30 சதவீதம் பேர் தேர்வு எழுத வரவில்லை என்றும் தேர்வு ஒருங்கிணைப்பு அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai