Enable Javscript for better performance
மேட்டுப்பாளையத்தில் அம்மா உணவகம் கட்ட பூமி பூஜை- Dinamani

சுடச்சுட

    

    மேட்டுப்பாளையத்தில் அம்மா உணவகம் கட்ட பூமி பூஜை

    By மேட்டுப்பாளையம்  |   Published on : 30th June 2014 03:23 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் மேட்டுப்பாளையத்தில் ரூ. 35 லட்சம் மதிப்பில் அம்மா உணவகம் கட்டுவதற்கான பூமி பூஜை, பேருந்து நிலைய வளாகத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

    நகர்மன்றத் தலைவர் சதீஷ்குமார் தலைமை வகித்தார். துணைத் தலைவர் ரமாசெல்வி, நகராட்சி ஆணையர் (பொறுப்பு) கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    பூமி பூஜையை மாநிலங்களவை உறுப்பினர் ஏ.கே. செல்வராஜ், எம்எல்ஏ ஓ.கே. சின்னராஜ் ஆகியோர் துவக்கி வைத்தனர்.

    நிகழ்ச்சியில் நகர அவைத்தலைவர் சுப்பையன், நகர செயலர் வான்மதி சேட், மாவட்ட கவுன்சிலர் சிவசாமி, மாவட்ட அண்ணா தொழிற்சங்க இணைச் செயலர் சந்தானம் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai