சுடச்சுட

    

    லாரி மீது பைக் மோதல்: இரு வாகனங்களும் எரிந்து சேதம்

    By மதுக்கரை  |   Published on : 30th June 2014 03:25 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவை அருகே கந்தே கவுண்டன் சாவடி போலீஸ் எல்லைக்குள்பட்ட வேலந்தாவளத்தில் ஓடு ஏற்றி வந்த லாரி மீது ஞாயிற்றுக்கிழமை பைக் மோதியதில் இரு வாகனங்களும் தீப்பற்றி எரிந்து சேதமடைந்தன.

    ஆந்திர மாநிலம் நகரி புத்தூரிலிருந்து ஓடு ஏற்றிக்கொண்டு, கேரள மாநிலம் எர்ணாகுளத்திற்கு லாரி சென்று கொண்டிருந்தது. சித்தூர் மாவட்டம் வேலுரை சேர்ந்த ராஜேந்திரன் (51) ஓட்டி வந்தார். வேலந்தாவளம் அருகே வந்தபோது எதிரே வந்த பைக், லாரியின் முன்பகுதியில் பலமாக மோதியது. இதில் லாரியின் அடியில் பைக் சிக்கிக்கொண்டது. பைக்கின் பெட்ரோல் டேங்க் வெடித்து தீப்பற்றியது. இந்தத் தீ மளமளவென லாரி முழுவதும் பரவியது. இதில் இரு வாகனங்களும் முற்றிலும் எரிந்து சேதமடைந்தன.

    தீயணைப்பு படையினர் மற்றும் போலீஸார் அங்கு வந்தனர். அரை மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.

    பைக்கை ஓட்டி வந்தவர் சுந்தராபுரத்தை சேர்ந்த மோகனசுந்தரத்தின் மகன் விக்னேஷ்.(20) என்பது விசாரணையில் தெரியவந்தது. இந்த விபத்தில் அவருக்கு காயம் எற்பட்டது. அவர் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார்.

    விபத்து குறித்து க.க.சாவடி போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த விபத்தின் காரணமாக க.க.சாவடி-வேலந்தாவளம் சாலையில் ஒரு மணி நேரத்திற்கு மேல் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai