Enable Javscript for better performance
அவிநாசியில் ரூ. 1.10 கோடிக்கு பருத்தி ஏலம்- Dinamani

சுடச்சுட

    

    அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்க வளாகத்தில் புதன்கிழமை நடைபெற்ற ஏலத்தில் ரூ. 1.10 கோடிக்கு பருத்தி ஏலம் நடைபெற்றது (படம்).

    ÷ஏ.சி.எம்.எஸ். மையத்தில் நடைபெற்ற இந்த ஏலத்துக்கு, 6,200 பருத்தி மூட்டைகள்  கொண்டு வரப்பட்டன. குவிண்டால் ஒன்றுக்கு டி.சி.எச். ரகப் பருத்தி ரூ. 5,500 முதல் ரூ. 6,360  வரையிலும், ஆர்.சி.எச். ரகப்பருத்தி ரூ. 4700  முதல் ரூ. 5300 வரையிலும்,  மட்டரகப் பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 2400 முதல் ரூ. 3000 வரையிலும் ஏலம் போனது. மொத்தம் ஒரு கோடியே 10 லட்சம் ரூபாய்க்கு ஏலம் நடைபெற்றது. 

    ÷இதில், குன்னத்தூர், செங்கப்பள்ளி, சேலம், திருப்பத்தூர், ஆத்தூர், மேட்டூர், தர்மபுரி, பொம்மிடிப்பூண்டி, அந்தியூர், குண்டடம், கிணத்துக்கடவு, அன்னூர், கோபி, நீச்சாம்பாளையம் ஆகிய பகுதிகளிலிருந்து 650 பருத்தி விவசாயிகளும், 16 பருத்தி வியாபாரிகளும் பங்கேற்றனர்.

     இது குறித்து சங்கத் தலைவர் மு.சுப்பிரமணியம் கூறியது:

    பருத்தி சென்ற வாரத்தை விட 1,300 மூட்டைகள் வரத்து குறைவாக இருந்தது. இருப்பினும் பருத்தி விலை குவிண்டாலுக்கு ரூ. 150 அதிகரித்திருந்தது. மேலும் ஏ.சி.எம்.எஸ். சார்பில் சேவூர், அவிநாசி ஆகிய பகுதிகளில் நடைபெற்று வந்த வாழைக்காய் ஏலம் பருவம் நிறைவடைந்ததால், ஏலம் மார்ச் 24-ஆம் தேதியுடன் முடிவடைந்தது. அடுத்த பருவத்தில் வாழைக்காய் ஏலம் வழக்கம் போல துவங்கும் என்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai