Enable Javscript for better performance
இடதுசாரி கூட்டணி தலைமை தேர்தல் அலுவலகம் இன்று திறப்பு- Dinamani

சுடச்சுட

    

    கோவையில் இடதுசாரி கூட்டணியின் தலைமை தேர்தல் அலுவலகத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் வியாழக்கிழமை திறந்து வைக்கிறார்.

    கோவை மக்களவைத் தொகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகளின் கூட்டணி வேட்பாளராக பி.ஆர்.நடராஜன் போட்டியிட உள்ளார்.

    தேர்தல் பணிகளை மேற்கொள்ளக் கூடிய வகையில் காந்திபுரத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டக் குழு அலுவலகத்தில் தலைமைத் தேர்தல் அலுவலகம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த அலுவலகத்தை கட்சியின் மாநில செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன் திறந்து வைக்க உள்ளார். இதைத் தொடர்ந்து கூட்டணி கட்சி சார்பில் செயல் வீரர்கள் கூட்டம் நடைபெறவுள்ளது. இதில் ஜி.ராமகிருஷ்ணன், மாவட்ட செயலாளர் வி.இராமமூர்த்தி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் எம்.ஆறுமுகம் உள்பட பலர் கலந்து கொள்ள உள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai