Enable Javscript for better performance
ஒன்றரை ஆண்டுகளாக கணவரை காணவில்லை என புகார்- Dinamani

சுடச்சுட

    

    கோவை அருகே ஒன்றரை ஆண்டுகளாக தனது கணவரை காணவில்லை என்று பெண் ஒருவர் அளித்த புகாரின் பேரில், போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

    இது குறித்து போலீஸார் கூறியது: கோவை, வடவள்ளி கஸ்தூரிநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் ரங்கசாமி. இவரது மனைவி புஷ்பா (36). புதன்கிழமை தொண்டாமுத்தூர் போலீஸில் புகார் ஒன்றை அளித்தார் புஷ்பா. அதில் அவர் கூறியிருப்பது: கணவர் ரங்கசாமியும் நானும் கடந்த 12 ஆண்டுகளாக பிரிந்து வாழ்ந்து வருகிறோம். இதற்கிடையில் தொண்டாமுத்தூரை சேர்ந்த லட்சமி என்பவரை 6 ஆண்டுகளுக்கு முன் ரங்கசாமி திருமணம் செய்தார். அதன் பின்னரும் என் வீட்டுக்கு அடிக்கடி வந்து சென்றார்.

    இந் நிலையில் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக ரங்கசாமியை காணவில்லை. அவரை லட்சுமி மற்றும் அவரது குடும்பத்தினர் கொலை செய்திருக்கலாம். இதில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

    அதைத் தொடர்ந்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் உத்தரவின் பேரில் தொண்டாமுத்தூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai