Enable Javscript for better performance
காற்றாலை மோசடி வழக்கு: சரிதா நாயர், பிஜூ ராதாகிருஷ்ணன் ஆஜராகவில்லை- Dinamani

சுடச்சுட

    

    காற்றாலை மோசடி வழக்கு: சரிதா நாயர், பிஜூ ராதாகிருஷ்ணன் ஆஜராகவில்லை

    Published on : 27th March 2014 04:01 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    காற்றாலை மோசடி வழக்கு விசாரணையில் சரிதா நாயர், அவரது கணவர் பிஜு ராதாகிருஷ்ணன் ஆகியோர் புதன்கிழமை ஆஜராகாத காரணத்தால் வழக்கு ஒத்திவைக்கப்பட்டது.

    கேரள மாநிலம், ஆலப்புழா செங்கண்ணூரைச் சேர்ந்தவர் சரிதா நாயர் (35). அவரது கணவர் பிஜு ராதாகிருஷ்ணன் (40). இவர்கள் கோவையைத் தலைமையிடமாகக் கொண்டு, சர்வதேச ஆலோசனை மற்றும் மேலாண்மை சேவை என்ற பெயரில் நிறுவனம் நடத்தி வந்தனர். அவர்களிடம் ஆர்.சி.ரவி என்பவர் மேலாளராக பணிபுரிந்து வந்தார்.

    வடவள்ளியைச் சேர்ந்த தியாகராஜன், உதகையைச் சேர்ந்த அபு பாபாஜி அறக்கட்டளையின் நிர்வாக அறங்காவலர் ஜோத்ஸ்னா என்.கிளாசண்ட் ஆகியோரிடம் காற்றாலை அமைத்து தருவதாக கூறி ரூ.32.57 லட்சம் பெற்று மோசடி செய்ததாக, கடந்த 2008ஆம் ஆண்டு கோவை மாவட்ட குற்றப்பிரிவு போலீஸார் வழக்கு பதிவு செய்தனர்.  இந்த வழக்கில் சரிதா நாயர் உள்பட மூவரையும் 2009 ஜனவரி 9ஆம் தேதி கைது செய்தனர். பிறகு அவர்கள் ஜாமீனில் விடப்பட்டனர்.

    இவ் வழக்கு கோவை ஜே.எம்.6 நீதிமன்றத்தில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது சரிதா நாயர், பிஜு ராதாகிருஷ்ணன் ஆகியோர் ஆஜராகவில்லை. மேலாளர் ரவி மட்டும் ஆஜரானார்.

    இருவரும் ஆஜராகாதது குறித்து மாஜிஸ்திரேட் கார்த்திகேயன் கேள்வி எழுப்பியபோது, கேரளத்தில் வேறொரு வழக்கில் ஆஜராக வேண்டியிருந்ததால் பிஜு ராதாகிருஷ்ணனால் வர இயலவில்லை என்று அவரது தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அதே போல் சரிதா நாயரால் ஆஜராக முடியாத சூழல் குறித்து மாஜிஸ்திரேட்டிடம் மனு அளிக்கப்பட்டது.

    அதைத் தொடர்ந்து வழக்கை ஏப்ரல் 21ஆம் தேதிக்கு நீதிமன்றம் ஒத்திவைத்தது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai