Enable Javscript for better performance
சினிமா கலை இயக்குநரை தேடும் பணி தீவிரம்- Dinamani

சுடச்சுட

    

    வெள்ளியங்கிரி மலையில் காணாமல் போன சினிமா கலை இயக்குநரை, அதை ஒட்டியுள்ள கேரள வனப்பகுதிகளில் தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

    திண்டுக்கல் மாவட்டத்தை சேர்ந்தவர் வினோத் (35). சென்னை, கே.கே.நகரில் தங்கி சினிமாவில் கலை இயக்குநராக பணி செய்து வருகிறார்.

    கடந்த பிப்ரவரி 27ஆம் தேதி சிவராத்திரி நாளில் கோவை வந்த அவர், பூண்டி அருகேயுள்ள வெள்ளியங்கிரி மலைக்கு சென்றார். அங்கு சுவாமி தரிசனம் செய்துவிட்டு மறுநாள் காலை மலையிலிருந்து இறங்கும் நேரத்தில், வழிதவறி காட்டுக்குள் சென்றதாக தெரிகிறது. பிறகு அவர் என்ன ஆனார் என்பது குறித்து தகவல் இல்லை.

    மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எம்.சுதாகர் உத்தரவின் பேரில் மலைவாழ் மக்கள், வனத்துறையினர், சிறப்பு அதிரடிப்படை போலீஸார் என பல்வேறு குழுவினர் தேடி வந்தனர்.

    வெள்ளியங்கிரி சார்ந்த வனப்பகுதிகள் முழுவதும் தேடும் பணி முடிவடைந்துள்ள நிலையில், தற்போது அதனை ஒட்டியுள்ள கேரள வனப்பகுதிகளில் தேடும் பணி முடுக்கி விடப்பட்டுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai