Enable Javscript for better performance
சைக்கிளில் தேர்தல் பிரசாரம் செய்தவரிடம் போலீஸ் விசாரணை- Dinamani

சுடச்சுட

    

    கோவையில் அதிமுகவுக்கு ஆதரவாக புதன்கிழமை சைக்கிளில் பிரசாரம் செய்த நபரிடம் போலீஸார் விசாரணை நடத்தினர்.

    நாமக்கல் மாவட்டம், திருச்செங்கோட்டை சேர்ந்தவர் சைக்கிள் வடிவேல் (49). இவர் கடந்த செப்டம்பர் மாதம் முதல் தமிழகம் முழுவதும் சைக்கிள் மூலமாக அதிமுகவுக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வருகிறார்.

    புதன்கிழமை காலை கோவை நீதிமன்றம் அருகே அவர் சென்றபோது, தேர்தல் விதிமுறைகளை மீறி விட்டதாக கூறி பொதுமக்கள் சிலர் அவரைப் பிடித்து ரேஸ்கோர்ஸ் போலீஸில் ஒப்படைத்தனர்.

    போலீஸார் அவரிடம் விசாரித்ததில், பிரசாரம் செய்ய தான் தமிழக காவல்துறை டி.ஜி.பி.யின் அனுமதி பெற்றிருப்பதாக அதற்குரிய ஆவணத்தை காட்டினார். இருப்பினும் அதில் உள்ளூர் போலீஸாரின் அனுமதி பெற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உள்ளூர் அனுமதி பெறவே தான் வந்ததாக போலீஸாரிடம் அவர் தெரிவித்ததால் விடுவிக்கப்பட்டார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai