Enable Javscript for better performance
மத்திய சிறைக்குள் திடீர் சோதனை- Dinamani

சுடச்சுட

    

    கோவை மத்திய சிறைக்குள் மாநகர தனிப்படை போலீஸார் புதன்கிழமை திடீர் சோதனை நடத்தினர்.

    இது குறித்து போலீஸார் கூறியது: கோவை மத்திய சிறைக்குள் கைதிகளிடமிருந்து செல்போன் உள்ளிட்ட பொருள்கள் அடிக்கடி பறிமுதல் செய்யப்பட்டு வருகின்றன. மேலும் சிறைக்குள் அடைக்கப்பட்டுள்ள கைதிகளிடம் தடை செய்யப்பட்ட பொருள்கள் அதிக புழக்கத்தில் இருப்பதாகவும் புகார் எழுந்தது.

    இந்நிலையில் மாநகர காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவின் பேரில் மாநகர மத்திய உதவி ஆணையர் வெங்கடேசன் தலைமையில் 3 ஆய்வாளர்கள் உள்பட 65 போலீஸார் அடங்கிய தனிப்படையினர், புதன்கிழமை மாலை கோவை மத்திய சிறைக்குள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

    சுமார் ஒரு மணி நேரம் சோதனை நடைபெற்றது. இது வழக்கமான சோதனைதான்; சோதனையில் எந்த பொருளும் சிக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai