Enable Javscript for better performance
மாறுதலுக்கான புதிய அத்தியாயம் தொடக்கம்: எச். ராஜா - Dinamani

சுடச்சுட

    

    தமிழகத்தில் மாறுதலுக்கான புதிய அத்தியாயம் தொடங்கிவிட்டது என, பாஜக தேசிய செயற்குழு உறுப்பினர் எச். ராஜா கூறினார்.

    கோவையில் புதன்கிழமை நடைபெற்ற கோவை மக்களவைத் தொகுதி பாஜக வேட்பாளர் சி.பி. ராதாகிருஷ்ணன் அறிமுகக் கூட்டத்தில் பங்கேற்று அவர் மேலும் பேசியதாவது:

    1967-ம் ஆண்டுக்குப்பின் தமிழகத்தில் இப்போதுதான் மக்களவைத் தேர்தலுக்கு மகத்தான கூட்டணி அமைந்துள்ளது. சென்னையில் நடந்த தொகுதி உடன்பாட்டுக்குப்பின் பாஜக தலைவர் ராஜ்நாத் சிங், தேமுதிக தலைவர் விஜயகாந்த், மதிமுக பொதுச் செயலர் வைகோ, பாமக இளைஞரணித் தலைவர் அன்புமணி ராமதாஸ், கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சி பொதுச் செயலர் ஈ.ஆர். ஈஸ்வரன், ஐஜேகேவின் பாரிவேந்தர் ஆகியோர் கூட்டமொன்றில் பேசினர். இதன் மூலம் தமிழகத்தில் மாறுதலுக்கான புதிய அத்தியாயம் தொடங்கியது.

    நாடு முழுவதும் இப்போது மோடி அலை வீசுகிறது.

    2009-ல் இப்போது பாஜக கூட்டணியில் உள்ள கட்சிகள் பெற்ற வாக்குகளைச் சேர்த்தால் 25 சதவீதம், மோடி அலைக்காக 15 சதவீதம் ஆக மொத்தம் 40 சதவீத வாக்குகள் கிடைப்பது உறுதி. தமிழகத்தில் பாஜக கூட்டணி அமோக வெற்றி பெறும் என்றார்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai