Enable Javscript for better performance
மின் வாரிய அலுவலகம் முற்றுகை- Dinamani

சுடச்சுட

    

    தமிழ்நாடு மின்சார வாரியத்தின் கோவை மின் பகிர்மான வட்ட பெருநகர் சூலூர் உதவி மின் பொறியாளர் அலுவலகத்தை மின் ஒப்பந்ததாரர்கள் சங்கத் தலைவர் அய்யாசாமி தலைமையில் சுமார் 50 பேர் புதன்கிழமை முற்றுகையிட்டனர்.

    புதிய மின் இணைப்புகள் கொடுக்கும் போது மீட்டர் பொருத்த உபயோகப்படுத்தும் மின் இணைப்புப் பெட்டியின் அளவு போதுமானதாக இல்லையெனவும், இரும்பு பெட்டிக்குப் பதிலாக முன்பு இருந்தது போல் மரத்தினாலான பலகை பொருத்தும்படி  அதிகாரிகள் கூறுவதாகவும் ஒண்டிப்புதூர் கோட்ட சூலூர் நகர பிரிவு உதவி செயற்பொறியாளரிடம் மின் ஒப்பந்ததாரர்கள் முறையிட்டனர்.

    இதற்கு பதிலளித்த உதவி செயற்பொறியாளர் சிவதாஸ், பாதுகாப்பு அம்சங்களைக் கருத்தில் கொண்டு மின் இணைப்புப் பெட்டி அமைய வேண்டும் என்று மின் ஒப்பந்ததாரர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மேலும் இப்பிரச்னையில் சுமுக முடிவெடுக்கப்படும் என்று கூறினார்

    மேலும் தற்போது தேர்வுகள் நடைபெற்று வருவதால் மாதமொருமுறை ஒரு நாள் பராமரிப்புப் பணிக்காக நடைமுறையில் உள்ள மின் நிறுத்தம் மார்ச் மாதம் கிடையாது என்றார்.

    பேச்சுவார்த்தையின் முடிவில் சமாதானமடைந்த மின் ஒப்பந்ததாரர்கள் அலுவலகத்திலிருந்து வெளியேறினர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai