Enable Javscript for better performance
10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு: 45,102 மாணவர்கள் பங்கேற்பு- Dinamani

சுடச்சுட

    

    கோவை வருவாய் மாவட்டத்தில் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வை 45,102 மாணவ, மாணவிகள் எழுதினர்.

    தமிழகத்தில் 10ஆம் வகுப்பு பொதுத் தேர்வு புதன்கிழமை (மார்ச் 26) தொடங்கியது. இத்தேர்வுகள் ஏப்ரல் 9 ஆம் தேதி வரை நடைபெற உள்ளன.

    கோவை கல்வி மாவட்டத்தில் 36,457 மாணவ, மாணவிகள் தேர்வு எழுத பதிவு செய்திருந்தனர். இதுதவிர 1,950 தனித்தேர்வர்களும் தேர்வு எழுத பதிவு செய்திருந்தனர். ஆக மொத்தம் 38,407 பேர் தேர்வு எழுத பதிவு செய்திருந்தனர். இதில் 1447 பேர் தேர்வு எழுத வரவில்லை. மொத்தம் 36,960 பேர் தேர்வு எழுதினர்.

    பொள்ளாச்சி கல்வி மாவட்டத்தில் 8,486 பேர் தேர்வு எழுத பதிவு செய்திருந்தனர். 344 பேர் தேர்வு எழுத வரவில்லை. மொத்தம் 8,142 பேர் தேர்வு எழுதினர். இரு கல்வி மாவட்டங்களில் சேர்த்து மொத்தம் 45,102 பேர் தேர்வு எழுதினர். மொழித்தாளில் முதல் தாளுக்கான தேர்வு எளிதாக இருந்ததாக மாணவ, மாணவிகள் தெரிவித்தனர்.

    10ஆம் வகுப்பு பொதுத் தேர்வையொட்டி முதன்மை கண்காணிப்பாளர்கள் 134 பேர், பள்ளி கல்வி அலுவலர்கள் 134, பறக்கும் படையினர் 140, தேர்வு கண்காணிப்பாளர்கள் 2,240, வழித்தட அலுவலர்கள் 28 உள்ளிட்டோர் தேர்வு கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai