Enable Javscript for better performance
காய்கறி, பழப்பொருள்களை வணிக முறையில் தயாரிக்க 2 நாள்கள் பயிற்சி- Dinamani

சுடச்சுட

    

    காய்கறி, பழப்பொருள்களை வணிக முறையில் தயாரிக்க 2 நாள்கள் பயிற்சி

    By dn  |   Published on : 21st May 2014 03:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வணிக முறையிலான காய்கறி மற்றும் பழப்பொருள்கள் தயாரித்தல் குறித்த இரு நாள் பயிற்சி, தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் மே 28 ஆம் தேதி தொடங்குகிறது.

    இதில் உலர வைக்கப்பட்ட காய்கறிகள் மற்றும் பழங்கள், பலவகை பழ ஜாம், பழரசம், தயார்நிலை பானம், ஊறுகாய், ஊறுகனி, பழ மிட்டாய் தயாரிப்பது குறித்து பயிற்சி அளிக்கப்படும்.

    இப்பயிற்சியில் சேர ஆர்வமுள்ளவர்கள் ரூ.1,000 செலுத்தி தங்கள் பெயரை முன்பதிவு செய்து கொள்ளலாம். நேரில் வந்து பெயரை பதிவு செய்துகொள்ள இயலாதவர்கள் தலைவர், அறுவடை பின்சார் தொழில்நுட்ப மையம், வேளாண் பொறியியல் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம், தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், கோவை 641003 என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம்.

    இப்பயிற்சியில் சேர பதிவு செய்துகொள்ள இறுதி நாள் மே 27 ஆம் தேதியாகும். மேலும் விவரங்களுக்கு 0422-6611340, 6611268.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai