சுடச்சுட

    

    குனியமுத்தூர் காவல் நிலையத்துக்கு புதிய கட்டடம் கட்டும் பணி துவக்கம்

    By கோவை  |   Published on : 16th April 2015 03:18 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவை குனியமுத்தூர் காவல் நிலையத்துக்கு புதிய கட்டடம் கட்டுதற்கான கட்டுமானப் பணிக்கு புதன்கிழமை அடிக்கல் நாட்டப்பட்டது.

    கோவை, போத்தனூர் காவல் நிலையத்திலிருந்து கடந்த 2006-ஆம் ஆண்டு குனியமுத்தூர்ப் பகுதி பிரிக்கப்பட்டு, குனியமுத்தூர் காவல் எல்லை உருவாக்கப்பட்டது. இந்த காவல் நிலையம், பாலக்காடு சாலையில் உள்ள தனியார் மில் ஊழியர் கூட்டமைப்பு அலுவலகக் கட்டடத்தில் செயல்பட்டு வருகிறது. இதற்கு வாடகையாக தற்போது மாதந்தோறும் ரூ. 11,300 வழங்கப்படுகிறது.

    இந்நிலையில், கடந்த 2012-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் இந்த காவல் நிலையத்துக்கு புதிய கட்டடம் கட்டப் பரிந்துரை செய்யப்பட்டது. அதே ஆண்டில் மே மாதம் அதற்கு ஒப்புதல் வழங்கப்பட்டு, நிதி ஒதுக்கப்பட்டது. அதையடுத்து, ஸ்ரீ கிருஷ்ணா கல்வி நிறுவனங்களுக்கு எதிரில் உள்ள அரசு நிலத்தில் புதிதாக காவல் நிலையம் அமைக்க இடம் தேர்வு செய்யப்பட்டது.

    இந்நிலையில், காவல் நிலையம் கட்டுவதற்கான கட்டுமானப் பணிக்கு அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. இதில், அமைச்சர் எஸ்.பி.வேலுமணி அடிக்கல் நாட்டி, பணியைத் தொடங்கி வைத்தார். மாநகரக் காவல் ஆணையர் ஏ.கே.விஸ்வநாதன், சட்டம், ஒழுங்கு துணை ஆணையர் பிரவேஷ்குமார், போக்குவரத்து துணை ஆணையர் ராஜசேகரன், மாநகர தெற்குப் பகுதி உதவி ஆணையர் அனிதா உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

    Thirumana Porutham
    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai