Enable Javscript for better performance
குடல் நோயால் பாதிக்கப்பட்ட யானை சாவு- Dinamani

சுடச்சுட

    

    கோவையை அடுத்த ஆனைகட்டி வனப் பகுதிக்கு உள்பட்ட மாங்கரையில் குடல் நோயால் பாதிக்கப்பட்ட ஆண் யானை வியாழக்கிழமை உயிரிழந்தது.

     கோவை வனச்சரகத்துக்கு உள்பட்ட வன ஊழியர்கள் குடியிருப்பு அருகே கஞ்சிப்பள்ளம் பகுதியில் புதன்கிழமை, யானை நகர முடியாமல் நீண்ட நேரமாக நின்றிருந்தது. அந்த யானையை வனத்துறையினர் நீண்ட நேரம் கண்காணித்ததில் அது வாய்ப்புண்ணால் பாதிக்கப்பட்டிருந்தது தெரியவந்தது.

     இதையடுத்து, அந்த யானைக்கு சிகிச்சை அளிப்பதற்காக கோவை வனச் சரகர் சேகர் தலைமையில் ஆனைகட்டி கால்நடை உதவி மருத்துவர் ஜெயந்தி, மடத்தூர் கால்நடை உதவி மருத்துவர் சாம் ரிச்சர்ட் ஆகியோர் கஞ்சிப்பள்ளம் பகுதிக்கு வியாழக்கிழமை சென்றனர். அங்கு, அந்த யானை உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது.

     இதையடுத்து, அந்த யானையின் சடலத்தை கால்நடை மருத்துவர்கள் பிரேதப் பரிசோதனை செய்தனர். அதில், 3 வயதுடைய அந்த யானை குடல் நோயால் பாதிக்கப்பட்டிருந்ததாக தெரியவந்தது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai