Enable Javscript for better performance
குடும்பத் தகராறில்  மனைவி கொலை: கணவருக்கு ஆயுள் தண்டனை- Dinamani

சுடச்சுட

    

    குடும்பத் தகராறில்  மனைவி கொலை: கணவருக்கு ஆயுள் தண்டனை

    By கோவை  |   Published on : 17th April 2015 04:06 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    குடும்பப் பிரச்னையில் மனைவியை கொலை செய்த கணவருக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை நீதிமன்றம் உத்தரவிட்டது.

    கேரளத்தில், சித்தூர் மூங்கில்மடைப் பகுதியைச் சேர்ந்தவர் மணியன் (எ) கே.மணிகண்டன் (25). இவருக்கும், பொள்ளாச்சி மதுரைவீரன் கோயில் தெருவைச் சேர்ந்த பாக்யா (20) என்பவருக்கும் கடந்த 2011-ஆம் ஆண்டு திருமணம் நடைபெற்றது.

    திருமணத்துக்கு பிறகு, அந்த தம்பதிக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால், பாக்யா தனது கணவருடன் தன் பெற்றோர் வீட்டில் தங்கினார். அங்கும் கணவன், மனைவிக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டது. மணிகண்டனுக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததால், அவர் வேலைக்கு செல்லாமல் மனைவியிடம் பணம் வாங்கி செலவு செய்து வந்தார். இந்நிலையில் கடந்த 2013-ஆம் ஆண்டு செப்டம்பர் 19-ஆம் தேதி அந்த தம்பதிக்குள் மீண்டும் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது, பாக்யாவை கீழே தள்ளி, அவரது கழுத்தை நெரித்து மணிகண்டன் கொலை செய்துவிட்டு, அங்கிருந்து தப்பினார்.

    இது குறித்து பொள்ளாச்சி, வடக்கிபாளையம் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, மணிகண்டனை கைது செய்தனர்.

    இந்த வழக்கு விசாரணை கோவை அனைத்து மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இவ்வழக்கில் வியாழக்கிழமை வழக்கில் தீர்ப்பு அளிக்கப்பட்டது. குற்றம் சுமத்தப்பட்ட மணிகண்டனுக்கு கொலைக் குற்றத்துக்காக ஆயுள் தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதித்து நீதிபதி எம்.பி.சுப்ரமணியன் தீர்ப்பளித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai