Enable Javscript for better performance
கேரள பேராசிரியர் கை வெட்டப்பட்ட வழக்கு: முக்கிய நபர் கோவையில் கைது- Dinamani

சுடச்சுட

    

    கேரள பேராசிரியர் கை வெட்டப்பட்ட வழக்கு: முக்கிய நபர் கோவையில் கைது

    By கோவை  |   Published on : 17th April 2015 04:14 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கேரளத்தில் பேராசிரியர் டி.ஜே.ஜோசப் கை வெட்டப்பட்ட வழக்கில் நீண்ட நாள்களாக தலைமறைவாக இருந்த நபரை கோவையில் தேசிய புலனாய்வு அமைப்பினர் கைது செய்தனர்.

    கேரள, தொடுபுழாவில் உள்ள தனியார் கல்லூரியில் மலையாள மொழித் துறை பேராசிரியராக பணியாற்றிவர் டி.ஜே.ஜோசப். இவர் தயாரித்த வினாத்தாளில் ஒரு குறிப்பிட்ட மதத்தினர் புண்படும் வகையில் வார்த்தைகள் இருந்ததாக புகார் எழுந்தது.

    இந்நிலையில் கடந்த 2010-ஆம் ஆண்டு ஜூலை 4-ஆம் தேதி அதிகாலை  தேவாலயத்தில் வழிபட்ட பின்னர் காரில் குடும்பத்துடன் திரும்பிய அவரை, ஒரு கும்பல் வழிமறித்து, அவரது வலது கையை வெட்டியது. இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக தேசிய புலனாய்வு அமைப்பினர் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்நிலையில் இந்த வழக்கில் 31-ஆவது நபராக தேடப்பட்ட, கேரளத்தில் ஆலுவா பகுதியைச் சேர்ந்த கே.ஏ.நஜீப் (38) என்பவர் கோவை, டவுன்ஹால் பகுதியில் பதுங்கியிருப்பதாக இந்த புலனாய்வு அமைப்புக்கு தகவல் கிடைத்தது.

     அதையடுத்து, கேரளத்திலிருந்து கோவை வந்த தேசிய புலனாய்வு அமைப்பினர்  இரு தினங்களுக்கு முன், நஜீப்பை இங்கு வைத்து கைது செய்து, கேரளம்  கொண்டு சென்றனர்.

     இந்த வழக்கில் மேலும் தலைமறைவாக உள்ள நபர்கள் குறித்து விசாரிக்க, அவரை எர்ணாகுளம் நீதிமன்ற அனுமதியுடன் காவலில் எடுத்து விசாரித்தனர்.

    இந்நிலையில் வியாழக்கிழமை விசாரணை முடிந்து மீண்டும் அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai