Enable Javscript for better performance
சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை:தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை- Dinamani

சுடச்சுட

    

    சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை:தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை

    By கோவை  |   Published on : 17th April 2015 04:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவை அருகே 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமைக்கு  உள்படுத்திய தொழிலாளிக்கு ஆயுள் தண்டனை விதித்து கோவை மகளிர் நீதிமன்றம் வியாழக்கிழமை தீர்ப்பளித்தது.

     கேரளத்தில், நெம்மாரா புதுப்பாடிக் கிராமத்தைச் சேர்ந்த 16 வயது சிறுமி அப்பகுதியில் உள்ள தேயிலைத் தோட்டத்தில் வேலை செய்து வந்தார். அங்கு, வேலை இல்லாத நிலையில், தனது தோழியுடன் அந்த சிறுமி கடந்த 2013-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் வேலை தேடி பொள்ளாச்சி வருவதற்காக, நெம்மாரா பேருந்து நிலையத்தில் காத்திருந்தார். அப்போது, பொள்ளாச்சி சக்தி நகர், ஜீவா வீதியைச் சேர்ந்த கட்டடத் தொழிலாளி வி.முத்துக்குமார் (27) என்பவருடன் அந்த சிறுமிக்கு அறிமுகம் ஏற்பட்டுள்ளது. அவர்கள் இருவருக்கும் வேலை வாங்கித் தருவதாக முத்துக்குமார் கூறியதை நம்பாமல், அந்த சிறுமியின் தோழி, தன் சொந்த ஊருக்கு திரும்பினார்.

     அந்த சிறுமி, முத்துக்குமாருடன் பொள்ளாச்சி வந்தார். இந்நிலையில் சிறுமியை வேலைக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி, கடந்த 2013-ஆம் ஆண்டு ஜனவரி 28-ஆம் தேதி முத்துக்குமார் அந்த சிறுமியை பாலியல் உறவுக்கு உட்படுத்தியுள்ளார். மேலும், திருமணம் செய்து கொள்வதாகக் கூறி, சிறுமியை அவர் பல்வேறு பகுதிகளுக்கு அழைத்துச் சென்று பாலியல் உறவுக்கு உட்படுத்தியுள்ளார்.

     இந்நிலையில், இரண்டு மாதங்கள் கழித்து, முத்துக்குமாருக்கு திருமணமாகி குழந்தை இருக்கும் விஷயம் சிறுமிக்கு தெரிய வந்தது. முத்துக்குமாரின் வீட்டாருக்கும் இப்பிரச்னை தெரியவந்தது.

      இந்நிலையில், சிறுமிக்கு தான் அடைக்கலம் கொடுத்ததாகக் கூறி,கோவை போலீஸாரிடம் சிறுமியை முத்துக்குமார் ஒப்படைத்தார். முன்னதாக, பாலியல் தொல்லை கொடுத்தது குறித்து வெளியில் தெரிவிக்கக் கூடாது என்று சிறுமியை  அவர் மிரட்டியுள்ளார். இதற்கிடையில், சிறுமி காணாமல் போனதாக அவரது தாயார் கேரள போலீஸில் புகார் அளித்திருந்த நிலையில், கோவை போலீஸார் சிறுமியை கேரளப் போலீஸார் மூலமாக தாயாரிடம் ஒப்படைத்தனர்.

     தனது தாயாரிடம், தான் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தை சிறுமி தெரிவித்துள்ளார். அதையடுத்து, சிறுமியின் தாயார் கேரளப் போலீஸில் புகார் கொடுத்தார். இச்சம்பவம் நடைபெற்ற இடம் பொள்ளாச்சிப் பகுதி என்பதால், இவ்வழக்கு பொள்ளாச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது.குழந்தைகள் பாலியல் வன்கொடுமைப் பாதுகாப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்த மகளிர் போலீஸார், முத்துக்குமாரை கைது செய்தனர்.

     இந்த வழக்கு விசாரணை கோவை அனைத்து மகளிர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசு தரப்பில் வழக்குரைஞர் ஆர்.சரோஜினி ஆஜரானார். இவ்வழக்கில் வியாழக்கிழமை தீர்ப்பு அளிக்கப்பட்டது. குற்றம் சுமத்தப்பட்ட முத்துக்குமாருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.10,000 அபராதமும் விதித்து நீதிபதி எம்.பி.சுப்ரமணியன் தீர்ப்பளித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai