Enable Javscript for better performance
தனியார் பாலிடெக்னிக் கட்டடங்களுக்கு \\\"சீல்\\\'- Dinamani

சுடச்சுட

    

    பொள்ளாச்சியை அடுத்த அங்கலக்குறிச்சியில் அனுமதியின்றி கட்டப்பட்ட தனியார் பாலிடெக்னிக் கல்லூரி, கல்வியியல் கல்லூரியில் கட்டடங்களுக்கு நகர ஊரமைப்புத் துறை அதிகாரிகள் வியாழக்கிழமை சீல் வைத்தனர்.

    பொள்ளாச்சி-வால்பாறை சாலையில் அங்கலக்குறிச்சியில் தனியார் பாலிடெக்னிக் கல்லூரி, கல்வியியல் கல்லூரி செயல்பட்டு வருகிறது. இந்த பாலிடெக்னிக் கல்லூரியில் 650 மாணவ, மாணவிகளும், கல்வியியல் கல்லூரியில் 100 மாணவ, மாணவிகளும் பயின்று வருகின்றனர்.

     இந்தக் கல்லூரியில் கட்டடம் கட்டுவதற்கு நகர ஊரமைப்புத் துறை, மலையிடப் பாதுகாப்புத் துறை ஆகியவற்றிடம் அனுமதி பெறவில்லை என்று கூறப்படுகிறது.

    இதுதொடர்பாக, கடந்த மூன்று ஆண்டுகளுக்கு முன், நகர ஊரமைப்புத் துறையினர், அக்கல்லூரி நிர்வாகத்துக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். ஆனால், இதுநாள் வரை கட்டடங்கள் கட்டுவதற்கு நகர ஊரமைப்புத் துறையிடம், அக்கல்லூரி நிர்வாகத்தினர் அனுமதி பெறாமல் இருந்துள்ளனர்.

     இதையடுத்து, கோவை நகர ஊரமைப்புத் துறை இணை இயக்குநர்(பொறுப்பு) க.மூக்கையா தலைமையிலான அதிகாரிகள், அக்கல்லூரியில் வியாழக்கிழமை ஆய்வு செய்தனர். இதைத்தொடர்ந்து, அனுமதி பெறாமல் கட்டப்பட்டிருந்த கல்லூரி முதல்வர் அறை, கல்லூரி அலுவலக

    அறை, இரண்டாம் தளம் ஆகியவற்றுக்கு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

    இதுகுறித்து நகர ஊரமைப்புத் துறை அதிகாரிகள் கூறுகையில்,"மொத்தம் 16 ஆயிரம் சதுர அடிக்கும் மேல் அனுமதி பெறாமல் இக்கல்லூரியில் கட்டடங்கள் கட்டப்பட்டுள்ளன. வகுப்பறைகளில் மாணவர்கள் இருந்ததால் அக்கட்டங்களுக்கு சீல் வைக்கவில்லை' என்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai