Enable Javscript for better performance
நடத்துநர் கொலை வழக்கு: இளைஞர் கைது- Dinamani

சுடச்சுட

    

    காரமடை அருகே நடத்துநர் கொலை வழக்கில்  இளைஞர் கைது செய்யப்பட்டார்.

     காரமடை அருகேயுள்ள குட்டையூரைச் சேர்ந்தவர் பிரான்சிஸ்(30). தனியார் பேருந்து நடத்துநர். இவருக்கு மனைவியும், ஒரு மகளும் உள்ளனர்.

     இந்நிலையில், கடந்த 12-ஆம் தேதி, பிரான்சிஸ் காரமடை குப்பைக் கிடங்கு அருகே பிணமாகக் கிடந்தார். இதுதொடர்பாக காரமடை போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

     இதில், மேட்டுப்பாளையத்தைச் சேர்ந்த கலிபுல்லாவின் மகன் அகமது ரசூலை பிடித்து போலீஸார் விசாரித்தனர். அதில், பிரான்சிஸின் மனைவிக்கும், ரசூலுக்கும் இடையே தொடர்பு இருந்ததாகவும், இதைக் பிரான்சிஸ் கண்டித்ததால் அவரைக் கொலை செய்ததாக ரசூல் ஒப்புக்கொண்டார்.இதையடுத்து, ரசூலை போலீஸார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai