Enable Javscript for better performance
2-ஆவது நாளாகத் தொடரும் வழக்குரைஞர்கள் போராட்டம்- Dinamani

சுடச்சுட

    

    2-ஆவது நாளாகத் தொடரும் வழக்குரைஞர்கள் போராட்டம்

    By மேட்டுப்பாளையம்  |   Published on : 17th April 2015 04:04 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு வழக்குரைஞர்கள் 2-ஆவது நாளாக வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.

     மேட்டுப்பாளையத்தில் நிரந்தர சார்பு நீதிமன்றம் அமைக்க வேண்டும். குற்றவியல் நீதிமன்றத்துக்கு நிரந்தர அரசு வழக்குரைஞரை நியமிக்க வேண்டும். நீதிமன்ற வளாகத்தில் வழக்குரைஞர்களுக்கான கூடம் அமைக்க வேண்டும். ஒரே நீதிமன்றமாக இயங்கி வரும் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம், குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றம் ஆகியவற்றை தனித்தனியாகப் பிரிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதன்கிழமை முதல் (ஏப்ரல் 15) மேட்டுப்பாளையம் வழக்குரைஞர்கள் சங்கம் சார்பில் தொடர் நீதிமன்றப் புறக்கணிப்புப் போராட்டம் தொடங்கப்பட்டது.

    இப்போராட்டத்தின் 2-ஆவது நாளான வியாழக்கிழமை, வழக்குரைஞர்கள் சங்கத் தலைவர் சிவகுரு தலைமையில் மேட்டுப்பாளையம் வட்டாட்சியர் அலுவலகத்தை வழக்குரைஞர்கள் முற்றுகையிட்டனர்.

    இதுதொடர்பாக, வட்டாட்சியர் கிருஷ்ணமூர்த்தியிடம், வழக்குரைஞர்கள் மனு அளித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai