Enable Javscript for better performance
குடியரசு தின விழா- Dinamani

சுடச்சுட

    

    தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நரசிம்மநாயக்கன்பாளையம், ராக்கிபாளையம் கிளைகள் சார்பில் குடியரசு தினவிழா திங்கள்கிழமை நடைபெற்றது.

    நரசிம்மநாயக்கன்பாளையம் பேருந்து நிறுத்தத்தில் நடந்த விழாவிற்கு கட்சி நிர்வாகிகள் கோவிந்தராஜ்,லட்சுமிபதி, என்.ஆர்.ராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிர்வாகி எல்.பாலாஜி தலைமை வகித்தார். வெங்கட்ராமன் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். ராக்கிபாளையத்தில் நடந்த குடியரசு தின விழாவிற்கு எஸ்.லாரன்ஸ் துரை தலைமை வகித்தார்.

    பெ.நா.பாளையம், ஜன. 26: பெரியநாயக்கன்பாளையம் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது.

    இதற்கு பெ.நா.பாளையம் நகர காங்கிரஸ் கமிட்டித் தலைவர் ஜெயக்குமார் தலைமை வகித்தார். நகர நிர்வாகிகள் ரங்கநாதன், கோவிந்தராஜ், சின்னசாமி, கருப்புசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    வீரபாண்டி பிரிவு,பெ.நா.பாளையம் பேருந்து நிறுத்தம், ஐஎன்டியுசி அலுவலகம், ஜோதிபுரம் ஆகிய பகுதிகளில் நடந்த விழாக்களில் பெ.நா.பாளையம் வட்டாரத் தலைவர் குணசேகரன் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.

    விவேகானந்தபுரத்தில் நடந்த விழாவிற்கு வட்டார எஸ்.சி.பிரிவு தலைவர்கள் பழனிசாமி, பி.பி.செல்வராஜ் ஆகியோர் தலைமை வகித்தனர். மாவட்டப் பொதுச் செயலாளர் ஆர்.விஜயகுமார் தேசியக் கொடியை ஏற்றி வைத்தார். கிளை செயலாளர் பண்ணாரி இனிப்புகள் வழங்கினார்.

    பொள்ளாச்சி, ஜன. 26: பொள்ளாச்சி சுற்றுப்பகுதியில் அரசு அலுவலகங்கள், பள்ளி, கல்லூரிகளில் குடியரசு தினவிழா கொண்டாடப்பட்டது.

    பொள்ளாச்சி சார்-ஆட்சியர் அலுவலகத்திலும், வட்டாட்சியர் அலுவலகத்திலும் நடைபெற்ற குடியரசு தினவிழாவில் சார்-ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே தேசியக்கொடியை ஏற்றிவைத்தார். பொள்ளாச்சி நகர்மன்ற அலுவலகத்தில் நகர்மன்ற ஆணையாளர் சுந்தராம்பாள் தேசியக் கொடியை ஏற்றிவைத்தார். பொள்ளாச்சி என்.ஜி.எம்., கல்லூரியில் முதல்வர் பத்ரிநாராயணன் தேசியக்கொடியை ஏற்றிவைத்தார்.

    பொள்ளாச்சி அடுத்த ஏரிப்பட்டி பொள்ளாச்சி இன்ஸ்டிடியூட் இன்சிடியூட் ஆஃப் இன்ஜினியரிங் பொறியியல் கல்லூரியில் கல்லூரி தலைவர் ரத்தனம் தேசியக்கொடியை ஏற்றிவைத்தார். பொள்ளாச்சி ஜமீன்முத்தூர் ஏ.ஆர்.பி. பள்ளியில் தாளாளர் சுப்ரமணியன் கொடியை ஏற்றிவைத்து மரியாதை செலுத்தினார்.

     

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai