Enable Javscript for better performance
பல்வேறு அமைப்புகள் சார்பில் குடியரசு தின விழா கொண்டாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    பல்வேறு அமைப்புகள் சார்பில் குடியரசு தின விழா கொண்டாட்டம்

    By கோவை,  |   Published on : 27th January 2015 05:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவையில் திங்கள்கிழமை பல்வேறு அமைப்புகள் சார்பில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் கொடியேற்றி, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டன.

    கோவை மாநகராட்சி அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் மேயர் கணபதி ராஜ்குமார் கலந்து கொண்டு தேசியக் கொடியேற்றி வைத்தார். ஆணையர் விஜயகார்த்திகேயன், துணை மேயர் லீலாவதி, மண்டலத் தலைவர் ஆதிநாராயணன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    பாப்பநாயக்கன்பாளையம் ராகுல் பவனில் காங்கிரஸ் கட்சி சார்பில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், கட்சியின் மாநில பொதுச் செயலர் மயூரா எஸ்.ஜெயக்குமார் கொடியேற்றி, பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினார். கட்சி நிர்வாகிகள் ஆசிரியர் பழனிசாமி, செளந்திரகுமார், வழக்குரைஞர் கருப்பசாமி, மாணவர் காங்கிரஸ் தலைவர் கே.என்.கே.சந்தோஷ், நாகராஜன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி சார்பில் ஆடிஸ் வீதியில் உள்ள மூப்பனார் பவனில் குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது. இதில் முன்னாள் எம்.எல்.ஏ. கோவை தங்கம், ஆறுமுகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். ஆம் ஆத்மி கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற குடியரசு தின விழாவில், தன்னார்வலர் பெருமாள் தேசியக் கொடியேற்றினார்.

    மதச் சார்பற்ற ஜனதாதளம் சார்பில் நஞ்சுண்டாபுரத்தில் நடைபெற்ற விழாவில், மாநகர் மாவட்டத் தலைவர் என்.கே.அசோக்குமார் தேசியக் கொடியேற்றினார். வார்டு தலைவர் சி.ஆறுமுகம், கே.விஜயன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    கோவை வட்டார பஞ்சாலைத் தொழிலாளர் சங்கம் (எச்.எம்.எஸ்.) சார்பில் நடைபெற்ற விழாவில், மாநிலத் தலைவரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான ஏ.சுப்பிரமணியம் கொடியேற்றினார். டி.எஸ்.ராஜாமணி, சி.சண்முகம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    ஐ.என்.டி.யு.சி. தேசிய பஞ்சாலைத் தொழிலாளர் சங்கம் சார்பில் ராமநாதபுரத்தில் நடைபெற்ற விழாவில் சங்கத் தலைவர் ஜி.ஸ்ரீனிவாசன் கொடியேற்றினார். துணைத் தலைவர்கள் எஸ்.குப்புசாமி, வி.ஆர்.ரங்கநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் புலியகுளம் பகுதியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் காவல் ஆய்வாளர் ஏ.கே.தங்கபாண்டியன் கொடியேற்றினார். சங்கத்தின் நகர முன்னாள் செயலர் த.நாகராஜ், இளைஞர்களுக்கான விளையாட்டுப் போட்டிகளைத் தொடங்கி வைத்தார். சங்கத்தின் கிளைச் செயலர் த.மாரிமுத்து உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    கல்வி நிறுவனங்கள்: பி.எஸ்.ஜி. தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற விழாவில் முதல்வர் ஆர்.ருத்ரமூர்த்தி தேசியக் கொடியேற்றி வைத்து என்.சி.சி. மாணவர்களின் அணி வகுப்பு மரியாதை ஏற்றுக் கொண்டார்.

    தேவாங்க மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற குடியரசு தின விழாவில் முன்னாள் மாணவர் டாக்டர் கே.ஜே.பினு கலந்து கொண்டு தேசியக் கொடியேற்றினார். பள்ளியின் செயலர் ஆர்.சிவராமன், தலைமை ஆசிரியர் என்.ஜெயச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai