Enable Javscript for better performance
பெண்கள் தற்கொலை: ஆர்.டி.ஒ.விசாரணைக்கு உத்தரவு- Dinamani

சுடச்சுட

    

    கோவையில் இரு வேறு பகுதிகளில் பெண்கள் இருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக ஆர்.டி.ஒ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    இதுகுறித்து போலீஸார் கூறியது: கோவை, பீளமேடு போலீஸ் எல்லைக்குள்பட்ட சேரன்மாநகர், செந்தில்குமார் நகரைச் சேர்ந்தவர் புஷ்பராஜ். இவரது மனைவி தேவி (27). இருவருக்கும் கடந்த 6 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடைபெற்றது. ஒரு பெண் குழந்தை உள்ளது. தம்பதி இருவரும் எம்.சி.ஏ. படித்தவர்கள். சொந்தமாக சிறிய அளவில் மென்பொருள் நிறுவனம் ஒன்றை வைத்து நடத்தி வந்தனர்.

    இருவருக்கும் இடையே சில நாள்களாக குடும்பப் பிரச்னை இருந்துள்ளது. இந் நிலையில், திங்கள்கிழமை காலை வீட்டில் தேவி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். பீளமேடு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். தேவி தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பாக ஆர்.டி.ஒ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

    இதே போல் சாயிபாபாகாலனி, என்.எஸ்.ஆர். சாலை பகுதியில் ஞாயிற்றுக்கிழமை காமினி (27) என்ற பெண் தற்கொலை செய்து கொண்ட விவகாரம் தொடர்பாகவும் ஆர்.டி.ஒ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

     

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai