Enable Javscript for better performance
பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்தில் கிராம சபைக் கூட்டம்- Dinamani

சுடச்சுட

    

    பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்தில் கிராம சபைக் கூட்டம்

    By பெ.நா.பாளையம்,  |   Published on : 27th January 2015 05:47 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பெரியநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியத்துக்குள்பட்ட 9 ஊராட்சிகளில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டங்களில் அடிப்படை பிரச்னைகளைத் தீர்க்க முன்னுரிமை அளிக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தினர்.

    சோமையம்பாளையம் ஊராட்சி சார்பில் அலுவலகத்தில் நடந்த கூட்டத்துக்கு இதன் தலைவர் ராமகிருஷ்ணன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் ஆனந்த குமார், கவுன்சிலர் மயில்சாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர். டெங்கு காய்ச்சல் ஒழிப்பு, பொது சுகாதாரம், புது வாழ்வு திட்டம், ஊரக வேலைவாய்ப்பு திட்டம் உள்பட பல்வேறு திட்டங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. இறுதியில் செயலாளர் கோபி நன்றி கூறினார்.

    பன்னிமடை ஊராட்சியில் இதன் தலைவர் சரவணக்குமார் தலைமையில் நடந்த கூட்டத்தில் விரிவு அலுவலர் ராமமூர்த்தி, சுகாதார ஆய்வாளர் சுப்பிரமணி ஆகியோர் கலந்துகொண்டனர். இங்கு பிரதான் மந்திரி கிராமசாலை மேம்பாட்டுத் திட்டப்பணிகள் குறித்து விவாதிக்கப்பட்டது. முடிவில் செயலாளர் சண்முகராஜ் நன்றி கூறினார்.

    நஞ்சுண்டாபுரம் ஊராட்சியில் அதன் தலைவர் வி.கே.வி.சுந்தர்ராஜ் தலைமையிலும், குருடம்பாளையம் ஊராட்சியில் அதன் தலைவர் ரவி தலைமையிலும் கிராம சபைக் கூட்டம் நடைபெற்றது.

    சின்னத்தடாகத்தில் நடந்த கூட்டத்துக்கு தலைவர் டி.என்.வேலுசாமி தலைமை வகித்தார். துணைத் தலைவர் வேல்முருகன், அலுவலர் தேவகுமாரி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai