Enable Javscript for better performance
பொள்ளாச்சி சார்-ஆட்சியருக்கு விருது- Dinamani

சுடச்சுட

    

    பொள்ளாச்சி சார்-ஆட்சியருக்கு சிறந்த வாக்காளர் பதிவு அலுவலர் விருது வழங்கப்பட்டது.

    கடந்த நாடாளுமன்ற தேர்தலில் பொள்ளாச்சி தொகுதி உதவி தேர்தல் நடத்தும் அலுவலராக பொள்ளாச்சி சார்-ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடே பணியாற்றினார். இத் தேர்தலில் வாக்குப் பதிவு சீரான முறையில் நடைபெற்றது. வரைவு வாக்காளர் இறுதிப் பட்டியில் வெளியிட்டதிலும் சிறந்த முறையில் பணியாற்றினார்.

    இதற்கு பாராட்டு தெரிவிக்கும் வகையில், சென்னையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற தேசிய வாக்காளர் தின நிகழ்ச்சியில் ஆளுநர் ரோசய்யா சிறந்த உதவி தேர்தல் நடத்தும் அலுவலர், சிறந்த வாக்காளர் பதிவு அலுவலர் ஆகிய விருதை பொள்ளாச்சி சார்-ஆட்சியர் ரஷ்மி சித்தார்த் ஜகடேவிற்கு வழங்கினார். இந் நிகழ்ச்சியில் தேர்தல் ஆணையர் சந்தீப் சக்சேனா பங்கேற்றார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai