Enable Javscript for better performance
அடிப்படை வசதி செய்து தரக்கோரி பழங்குடியின மக்கள் கோரிக்கை மனு- Dinamani

சுடச்சுட

    

    அடிப்படை வசதி செய்து தரக்கோரி பழங்குடியின மக்கள் கோரிக்கை மனு

    By வால்பாறை  |   Published on : 28th January 2015 05:55 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    வால்பாறை ஜன 27 : அடிப்படை வசதி செய்து கொடுக்க வலியுறுத்தி, எஸ்டேட் பகுதியில் நடைபெற்ற முகாமில் பழங்குடியின மக்கள் மனு அளித்தனர்.

    பழங்குடியின் மக்களுக்கான சிறப்பு முகாம் வால்பாறையை அடுத்த நல்லமுடி எஸ்டேட் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் செவ்வாய்கிழமை நடைபெற்றது. இதில்

    சங்கரன்குடி, கவர்க்கல், உடுமன்பாறை, பரமன்கடவு ஆகிய செட்டில்மெண்ட்களில் வசிக்கும் பழங்குடியின மக்கள் பங்கேற்றனர். சாலை வசதி, மின்சாரம், குடிநீர் போன்ற

    அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி வால்பாறை வட்டாட்சியர் என்.நேருவிடம் மனு அளிக்கப்பட்டது. முகாமில், நகராட்சி தலைவர் வே.சத்தியவாணிமுத்து,ஆணையாளர்

    சி. சாந்தகுமார் (பொறுப்பு), வார்டு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai