Enable Javscript for better performance
ஆர்ப்பாட்டத்தில் ஒலிபெருக்கி பயன்படுத்தத் தடை: காவல்துறை அறிவிப்புக்கு மார்க்சிஸ்ட் கண்டனம்- Dinamani

சுடச்சுட

    

    ஆர்ப்பாட்டத்தில் ஒலிபெருக்கி பயன்படுத்தத் தடை: காவல்துறை அறிவிப்புக்கு மார்க்சிஸ்ட் கண்டனம்

    By DN  |   Published on : 28th January 2015 05:51 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவை மாநகரில் அரசியல் கட்சிகள், அமைப்புகளின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெறும்போது ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தக் கூடாது என்று

    காவல்துறை அறிவித்திருப்பதற்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித்துள்ளது.

     கோவை மாநகரில் அரசியல் கட்சிகள், அமைப்புகள், சங்கங்கள், பொதுமக்கள் சார்பில் ஆர்ப்பாட்டம், உண்ணாவிரதம், தர்னா, கோரிக்கை இயக்கங்கள் உள்ளிட்டவற்றை

    நடத்துவதற்காக காந்திபுரம் மத்திய பேருந்து நிலையம், நீதிமன்றம் அருகேயுள்ள செஞ்சிலுவைச் சங்க கட்டடம் ஆகிய இடங்களைக் காவல்துறை ஒதுக்கீடு செய்து

    கொடுத்துள்ளது.

     காந்திபுரம் பகுதியில் மேம்பாலம் கட்டும் பணி நடைபெற்று வருவதால், கடந்த சில மாதங்களாக செஞ்சிலுவைச் சங்கம் எதிரில் மட்டுமே போராட்டங்கள் நடத்துவதற்கு

    அனுமதி வழங்கப்படுகிறது. இந்த நிலையில், மாநகர காவல்துறை சார்பில் செஞ்சிலுவைச் சங்கம் எதிரில் ஓர் அறிவிப்புப் பலகை வைக்கப்பட்டுள்ளது.

     அதில், இப்பகுதியைச் சுற்றி பல முக்கிய அலுவலகங்கள் இருப்பதால் ஆர்ப்பாட்டங்களின்போது இனி ஒலிபெருக்கிகளைப் பயன்படுத்தாமல், கைகளில் வைத்து பயன்படுத்தக்

    கூடிய சிறிய ஒலிபெருக்கி உபகரணங்களை மட்டுமே பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

     காவல்துறையின் இந்த அறிவிப்புக்கு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கோவை மாவட்டக் குழு கண்டனம் தெரிவித்துள்ளது. முன்னாள் எம்.பி. பி.ஆர்.நடராஜன்

    தலைமையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இக்கட்சியின் கூட்டத்தில் இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

     மக்கள் பிரச்னைகளுக்காக நடத்தப்படும் ஆர்ப்பாட்டங்களின் கோரிக்கை முழக்கங்கள் அரசின் செவிகளுக்கு எட்டக் கூடாது என்ற வகையில், மாநகர காவல்துறை

    அறிவிப்புப் பலகை வைத்திருப்பது ஏற்புடையதல்ல என்று கூறியுள்ள அக்கட்சி, 1998-ஆம் ஆண்டுக்கு பிறகு அரசியல் கட்சிகளிடம் கலந்து பேசி, மாநகரில் போராட்டம் நடத்த

    2 இடங்கள் முடிவு செய்யப்பட்ட நிலையில், தற்போது காவல்துறை எந்த ஓர் அரசியல் கட்சியிடமும் ஆலோசிக்காமல் தன்னிச்சையாக இந்த முடிவை எடுத்திருப்பதையும்

    கண்டித்துள்ளது.

     காளப்பட்டி, கோவைப் புதூர், மருதமலை அடிவாரம், துடியலூர், ஒண்டிப்புதூர் போன்ற இடங்களிலும், மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் வசிக்கக் கூடிய மக்கள், நீண்ட

    தொலைவு வந்து, பெரும் பொருள் செலவு செய்துதான் தங்களது கோரிக்கைகளை அரசுக்குத் தெரிவிக்க வேண்டும் என்ற நிலையே, ஜனநாயக உரிமையை ஒடுக்கும்

    நடவடிக்கை ஆகும்.

     எனவே, செஞ்சிலுவைச் சங்கம் எதிரில் ஒலிபெருக்கி வைத்து ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதிக்க வேண்டும். அல்லது அரசியல் கட்சிகளின் கூட்டத்தை நடத்தி, போராட்டம்

    நடத்த பொருத்தமான இடத்தைத் தேர்வு செய்ய முன்வர வேண்டும் என்று அக்கட்சியின் கோவை மாவட்டக் குழு வலியுறுத்தியுள்ளது.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai