Enable Javscript for better performance
கிணத்துக்கடவு வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி- Dinamani

சுடச்சுட

    

    கிணத்துக்கடவு வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயற்சி

    By பொள்ளாச்சி  |   Published on : 28th January 2015 05:53 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பொள்ளாச்சி, ஜன. 27:  வீடுகட்ட இடம் கேட்டு மக்கள் விடுதலை முன்னணி அமைப்பினர் கிணத்துக்கடவு வட்டாட்சியர் அலுவலகத்தை செவ்வாய்க்கிழமை முற்றுகையிட

    முயன்றனர்.

     கிணத்துக்கடவை அடுத்த கல்லாபுரம் பகுதியில் அருந்ததியினர் சமுதாயத்தைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.

     இவர்கள், வீடு கட்ட இலவச இடம் கேட்டு வருவாய்த் துறைக்கு பல முறை மனு அளித்துள்ளனர்.

     ஆனால், இதுவரை அவர்களது கோரிக்கைமீது எவ்வித நடவடிக்கையும் இல்லாததால், மக்கள் விடுதலை முன்னணி மாவட்ட அமைப்பாளர் தம்பு தலைமையில் 25-க்கும்

    மேற்பட்டோர் கிணத்துக்கடவு வட்டாட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட முயன்றனர். அவர்களிடம் வருவாய்த் துறையினர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

     அப்போது, ஒரு மாதத்திற்குள் அவர்களது கோரிக்கை குறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளிக்கப்பட்டது.

     இதையடுத்து அவர்கள் போராட்டத்தைக் கைவிட்டு கலைந்து சென்றனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai