Enable Javscript for better performance
கேரளத்திலிருந்து இறைச்சிக் கழிவுகளை ஏற்றி வந்த மினி லாரி சிறை பிடிப்பு- Dinamani

சுடச்சுட

    

    கேரளத்திலிருந்து இறைச்சிக் கழிவுகளை ஏற்றி வந்த மினி லாரி சிறை பிடிப்பு

    By சூலூர்  |   Published on : 28th January 2015 05:54 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    சூலூர், ஜன. 27:  சூலூர் அருகே இறைச்சிக் கழிவுகளை ஏற்றிவந்த மினி லாரியை  பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சிறை பிடித்தனர்.

     செட்டிபாளையம் பல்லடம் சாலையில் செவ்வாய்க்கிழமை பழுதாகி நின்ற மினி லாரியில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது, இதையடுத்து பொதுமக்கள் அங்கு சென்று

    பார்த்த போது அதில் கோழிக் கழிவுகள் மற்றும் மீன் கழிவுகள் இருப்பதைப் பார்த்து அந்த வாகனத்தை சிறை பிடித்தனர்.

     இதுகுறித்து பொதுமக்கள் சுகாதாரத் துறை அதிகாரிகளுக்கும், காவல் துறையினருக்கும் தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த சந்திராபுரம் சுகாதாரத் துறை

    ஆய்வாளர் ஜெயராமன், செஞ்சேரிமலை சுகாதாரத் துறை ஆய்வாளர் ரவிச்சந்திரன், சூலூர் காவல்துறையினர் ஆகியோர் விசாரணை மேற்கொண்டனர்.

     மினி லாரியின் ஓட்டுநர் நாமக்கல் தீர்த்தம்பாளையத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரனிடம் விசாரணை மேற்கொண்டனர், இதில் இறைச்சிக் கழிவுகள் கேரள மாநிலம்

    கோட்டயத்தில் இருந்து நாமக்கல் மாவட்டத்திற்கு கொண்டு செல்லப்படுவதும், அங்கு இக் கழிவுகளை  கோழிகளுக்கு உணவில் கலந்து கொடுக்க கொண்டு

    செல்லப்படுவதாகவும் தெரிய வந்தது.

      ஏற்கெனவே ஒரு முறை கொண்டு செல்லப்பட்டு தற்போது இரண்டாவது முறையாக  கொண்டு செல்லும் போது வாகனம் பழுதானதால் பொதுமக்கள் கண்டுபிடித்தது

    விசாரணையில் தெரியவந்தது.

      இந்த இறைச்சிக் கழிவுகள் தமிழகத்திற்குள் கொண்டு வர தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் சோதனைச் சாவடிகளைத் தாண்டி குறுக்கு வழியில் இந்தக் கழிவுகள் கொண்டு

    வரப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். மாவட்ட நிர்வாகத்திடம் பேசி இந்தக் கழிவுகளை மீண்டும் கேரளத்திற்கே திருப்பி அனுப்ப ஏற்பாடு செய்யப்படும் என

    சுகாதாரத் துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

      இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், தொடர்ச்சியாக இறைச்சிக் கழிவுகள் தங்கள் பகுதியில் கொட்டப்பட்டு வருவதாகவும், இதுகுறித்து பல முறை அதிகாரிகளுக்குத்

    தகவல் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டினர்.   சூலூர் காவல் துணை சிறப்பு ஆய்வாளர் ராஜேந்திரன் கூறுகையில், இச்சம்பவம் பற்றி வழக்குப்

    பதிவு செய்து மேலும் இத்தகைய முயற்சிகள் நடைபெறாவண்ணம் இப்பகுதி முழுமைக்கும் கண்காணிப்பை அதிகப்படுத்தவுள்ளதாகத் தெரிவித்தார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai