Enable Javscript for better performance
கோவையில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்- Dinamani

சுடச்சுட

    

    தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை மத்தியில் ஆளும் பாஜக அரசு முடக்குவதாகக் கூறி, கோவையில் காங்கிரஸ் கட்சியினர் செவ்வாய்க்கிழமை

    ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    செஞ்சிலுவைச் சங்கம் எதிரில், கட்சியின் எஸ்.சி. பிரிவு சார்பில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு கோவை மாநகர வடக்கு மாவட்டத் தலைவர் எஸ்.ஸ்ரீதரன் தலைமை

    தாங்கினார்.

    தெற்கு மாவட்டத் தலைவர் கே.என்.பாலச்சந்தர், புறநகர் வடக்கு மாவட்டத் தலைவர் பி.மாரியப்பன், புறநகர் தெற்கு மாவட்டத் தலைவர் பி.சி.கோபால்சாமி ஆகியோர்

    முன்னிலை வகித்தனர்.

     தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் துணைத் தலைவர் எம்.என்.கந்தசாமி, மாநகர காங்கிரஸ் தலைவர் வி.எம்.சி.மனோகரன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்.

    அவர்கள் பேசும்போது, காங்கிரஸ் கட்சியால் தொடங்கப்பட்ட தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை கைவிடமாட்டோம் என்று முதலில் கூறிய பாஜக அரசு, இப்போது

    இந்தத் திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடையும், பயனாளிகளின் எண்ணிக்கையையும் படிப்படியாகக் குறைத்து, திட்டத்தையே முடக்கி வருகிறது.

    முந்தைய காங்கிரஸ் அரசு 2014, 15 ஆம் ஆண்டுகளில் இந்தத் திட்டத்துக்காக ரூ.33 ஆயிரம் கோடியை ஒதுக்கீடு செய்திருந்தது. அதன்படி, செப்டம்பர் 2014 வரையிலும் ரூ.17

    ஆயிரம் கோடியை செலவிட்டிருக்க வேண்டும். ஆனால் பாஜக அரசோ ரூ.12 ஆயிரம் கோடியை மட்டும் செலவிட்டிருப்பதுடன், பயனாளிகளின் எண்ணிக்கையையும்

    வெகுவாக குறைத்துள்ளது.

    மேலும், இந்தத் திட்டம் செயல்பட்டு வரும் மாவட்டங்களின் எண்ணிக்கையையும் 625-ல் இருந்து 200 ஆக குறைக்கவும் திட்டமிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் இத்திட்டம்

    10 மாவட்டங்களில் மட்டுமே செயல்படக் கூடிய நிலை உருவாகும்.

    இந்தத் திட்டத்தை ரத்து செய்வது, நில உடைமையாளர்களின் தோட்டங்களுக்கு பணிக்கு அனுப்புவதன் மூலம் தாழ்த்தப்பட்ட, நலிவடைந்த மக்களை மீண்டும் ஆதிக்க

    சக்திகளின் கைப்பாவையாக மாற்ற பாஜக அரசு திட்டமிடுவதாக அவர்கள் குற்றஞ்சாட்டினர்.இந்த ஆர்ப்பாட்டத்தில் கோவை மாவட்ட காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள், எஸ்.சி.

    பிரிவைச் சேர்ந்தவர்கள், தொண்டர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai