Enable Javscript for better performance
மதப் பிரசாரம் செய்யும் ஐ.ஏ.எஸ். அதிகாரி மீது நடவடிக்கை- Dinamani

சுடச்சுட

    

    மதப் பிரசாரம் செய்யும் ஐ.ஏ.எஸ். அதிகாரி மீது நடவடிக்கை

    By DN  |   Published on : 28th January 2015 06:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    மதப் பிரசாரத்தில் ஈடுபடும் ஐ.ஏ.எஸ். அதிகாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சி பொதுச் செயலாளர் ஈ.ஆர்.ஈஸ்வரன் வலியுறுத்தினார்.

     இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கை:

     சென்னை ஒழுங்கு நடவடிக்கை ஆணையராக உமாசங்கர் ஐ.ஏ.எஸ். பணியாற்றி வருகிறார். இவர் தொடர்ந்து மதப் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார். இந்திய ஆட்சிப்

    பணியில் பதவி வகிக்கும் அதிகாரிகள் அனைவருக்கும் பொதுவானவர்.

     அவர் குறிப்பிட்ட மதத்திற்கு ஆதரவாக பிரசாரம் மேற்கொள்வது ஏற்கத்தக்கதல்ல. இது குறித்து பொதுமக்கள் பலர் தொடர்ந்து புகார் கூறியதன் பேரில் தமிழக அரசு

    அவருக்கு எச்சரிக்கை கடிதம் அனுப்பியுள்ளது. ஆனால், தனது செயலை அவர் நியாயப்படுத்தி வருகிறார்.

     அவரது பணியில் ஒரு மதத்தைச் சார்ந்தவர்களுக்கு ஒருதலைப்பட்சமாக நடந்து கொண்டிருக்க வாய்ப்பு உள்ளது. எனவே, கடந்த காலத்தில் அவர் பணியாற்றிய துறைகளில்

    எடுத்த நடவடிக்கைகள் குறித்து பரிசீலனைக்கு உள்படுத்த வேண்டும். அவருக்கு ஒதுக்கப்பட்ட பணியில் குறைபாடு இருந்தால் உரிய சட்ட நடவடிக்கைகள் மூலம் நிவாரணம்

    தேடிக் கொள்ளலாம்.

     இப்பிரச்னையில் தமிழக அரசின் தலைமைச் செயலாளர் எச்சரிக்கை விடுத்த பிறகும் தனது செயலுக்கு வருத்தம் தெரிவிக்காமல் தனது செயலை நியாயப்படுத்தி வரும்

    உமாசங்கர்  ஐ.ஏ.எஸ். மீது தமிழக அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai