Enable Javscript for better performance
வனக் கல்லூரி மாணவ, மாணவியர் காலவரையற்ற உள்ளிருப்பு போராட்டம்- Dinamani

சுடச்சுட

    

    வனக் கல்லூரி மாணவ, மாணவியர் காலவரையற்ற உள்ளிருப்பு போராட்டம்

    By மேட்டுப்பாளையம்  |   Published on : 28th January 2015 05:56 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மேட்டுப்பாளையம் வனக் கல்லூரி மாணவர்கள் காலவறையற்ற உள்ளிருப்பு போராட்டத்தை செவ்வாய்க்கிழமை முதல் துவங்கினர்.

    கோவை, தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகத்தின் கீழ், மேட்டுப்பாளையத்தில் இயங்கி வரும் வனக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் இளங்கலை, முதுகலை

    வனவியல் மற்றும் ஆராய்ச்சி படிப்பில் 200-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர் படித்து வருகின்றனர்.

    வனத் துறையில் வனச்சரகர் காலிப் பணியிடங்களை வனவியல் பட்டம் பெற்ற மாணவர்களைக் கொண்டு நிரப்பவேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை

    வலியுறுத்தி வனக் கல்லூரி மாணவர்கள் கடந்த பல வருடங்களாக தொடர் போராட்டம் நடத்தி வந்தனர்.

    அதன் விளைவாக கடந்த 2010-ஆம் ஆண்டு தமிழக வனச் சரக காலிப் பணியிடங்களில் வனவியல் பட்டம் பயின்ற மாணவ, மாணவியருக்கு 100 சதவீதம் இட ஒதுக்கீடு

    வழங்கி தமிழக அரசு ஆணை பிறப்பித்தது.

    இந்நிலையில், வனவியல் மாணவர்களுக்கு வழங்கப்பட்ட 100 சதவீதம் இட ஒதுக்கீட் டை 25 சதவீதமாக குறைத்து தமிழக அரசு கடந்த வருடம் ஆணை பிறப்பித்தது.

    இதையடுத்து வனக் கல்லூரி மாணவர்கள் மீண்டும் 100 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, மாணவர்களிடம் 

    பேச்சுவார்த்தை நடத்திய தமிழக வேளாண்மைத் துறை மற்றும் வனத் துறை அமைச்சர்கள் கோரிக்கைகள் குறித்து விரைவில் பரிசீலித்து நடவடிக்கை எடுக்கப்படுமென

    உறுதியளித்தனர். இதையடுத்து, போராட்டம் கைவிடப்பட்டது. ஆனால், உறுதியளித்தபடி இதுநாள் வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

    இதனால் விரக்தியும், ஏமாற்றமும் அடைந்த மாணவர்கள், வனக் கல்லூரியைச் சேர்ந்த 70 பெண்கள் உள்பட 270 மாணவ, மாணவியர் கல்லூரி வளாகம் முன்பு

    செவ்வாய்க்கிழமை (ஜனவரி 27) காலை குவிந்தனர்.

    வனச் சரகர் காலிப் பணியிடங்களை 100 சதவீதம் வனவியல் பட்டதாரிகளைக் கொண்டு நிரப்பவேண்டும். வனவர் பணிக்கு பிற பட்டதாரிகளைக் கொண்டு நிரப்பும் வகையில்

    உருவாக்கப்பட்ட அரசாணையை ரத்து செய்யவேண்டும் என்ன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, வகுப்புகளைப் புறக்கணித்து, காலவறையற்ற உள்ளிருப்பு

    போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தங்கள்கோரிக்கைகளை அரசு ஏற்கும் வரை உள்ளிருப்புப் போராட்டத்தில் தொடர்ந்து ஈடுபடப்போவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai