Enable Javscript for better performance
வாகனப் பதிவெண்களில் போலி முத்திரை: 600 பேருக்கு காவல்துறை அபராதம்- Dinamani

சுடச்சுட

    

    வாகனப் பதிவெண்களில் போலி முத்திரை: 600 பேருக்கு காவல்துறை அபராதம்

    By கோவை  |   Published on : 28th January 2015 05:52 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கோவை, ஜன. 27: கோவை மாநகரில் வாகனப் பதிவெண் தகடுகளில் (நம்பர் பிளேட்) போலி முப்பரிமாண ஒளிப்படத்தைப் பயன்படுத்தியதாக சுமார் 600 வாகன ஓட்டிகளிடம்

    போக்குவரத்து காவல்துறையினர் அபராதம் வசூலித்துள்ளனர்.

     வாகனங்களுக்கு அடையாளம் காட்டும் விதமாக வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் மூலம் வழங்கப்படும் பதிவெண்களை, எப்படி பயன்படுத்த வேண்டும் என்று

    விதிகள் வகுக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் 1989-ம் ஆண்டின் மத்திய அரசின் இயந்திர வாகனங்கள் விதிகளில் கடந்த 2005-ம் ஆண்டில் திருத்தம் கொண்டு வரப்பட்டது.

     அதன்படி, மோசடி செய்ய முடியாதபடி, குரோமியம் முப்பரிமாண நம்பர் பிளேட்டுகளில், வெளிர் நீல நிறத்தில் இந்தியா எனப் பொறிக்கப்பட்ட ஹாலோகிராம் எழுத்துகள்

    தெளிவான காட்சிக்காக பொறிக்கப்பட்டிருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை சில மாநிலங்களில் அமலுக்கு வந்துள்ளது.

     இந்நிலையில் கோவையில் இதுபோன்ற போலியான ஹாலோகிராம் முத்திரைகளை பதித்துக் கொண்டு வாகனங்கள் இயக்கப்படுவதாக காவல்துறைக்கு புகார்கள்

    வந்துள்ளன. இதன் அடிப்படையில் கடந்த 4 நாள்களாக போக்குவரத்து காவல்துறையினர் தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

     இதில், மாநகரின் பல்வேறு பகுதிகளில் மொத்தம் 600-க்கும் மேற்பட்ட வாகனங்களில் இதுபோன்ற அனுமதியில்லாத, போலியான ஹாலோகிராம் முத்திரைகள் இருப்பது

    கண்டுபிடிக்கப்பட்டு அவர்களிடம் தலா ரூ.100 வீதம் மொத்தம் ரூ.60 ஆயிரத்துக்கும் மேல் அபராதம் வசூலிக்கப்பட்டிருப்பதாக காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

     எனவே, போலியான முத்திரை பதித்த வாகனப் பதிவெண் வைத்திருப்பவர்கள் அதை உடனடியாக அகற்றிக் கொள்ள வேண்டும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai