Enable Javscript for better performance
விவேகானந்தா மேலாண்மைக் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்- Dinamani

சுடச்சுட

    

    விவேகானந்தா மேலாண்மைக் கல்லூரியில் வேலைவாய்ப்பு முகாம்

    By அன்னூர்  |   Published on : 28th January 2015 05:57 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    அன்னூர், ஜன. 27: கோவில்பாளையத்தில் உள்ள விவேகானந்தா மேலாண்மைக் கல்லூரியில் ஜனவரி 30,31-ஆம் தேதிகளில் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற உள்ளது.

    இம்முகாமில் 2012-ஆம் ஆண்டு முதல் இந்த (2015) ஆண்டு படிப்பை நிறைவு செய்யும் மாணவர்கள் வரையிலானோர் கலந்துகொண்டு பயன்பெறலாம்.

    இதில், கணினி, கணினிசார் சேவை, இன்சூரன்ஸ், வங்கி, நிதி மற்றும் விற்பனை உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த 30-க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்கள்

    பங்கேற்று 1,000-க்கும் மேற்பட்ட பணியிடங்களைப் பூர்த்தி செய்யத் தேர்வு நடத்துகின்றன.

    இவ்வேலைவாய்ப்பு முகாமில் பங்கேற்போர் வசதிக்காக கோவில்பாளையம் பேருந்து நிறுத்தத்திலிருந்து கல்லூரிக்கு பேருந்து வசதி செய்யப்பட்டுள்ளது.

    மேலும், இம்முகாம் குறித்த தகவல்களுக்கு, கல்லூரி பயிற்சி மற்றும் பணியமர்வுத் துறைத் தலைவரை 9524349676, 9994430081 என்ற செல்லிடப்பேசி எண்களில் தொடர்பு

    கொள்ளலாம்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம்
      பகிரப்பட்டவை
    google_play app_store
    kattana sevai